உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 20.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

238

இளங்குமரனார் தமிழ் வளம் – 20

30. ஆற்றமாட்டாதவன்

6

பொதுமக்கள் வாயில், எதுவும் செய்ய இயலாதவனை ஆற்றமாட்டாதவன் என்று பழிப்பது பரவலாகக் கேட்கும்

செய்தி.

ஆற்ற என்பது செயலாற்ற என்பதாம். அவன் உண்பான், உடுப்பான், பிள்ளை பெறுவான் அவையும் செயல்கள் தாமே! அவற்றைச் செய்வானை ஆற்ற மாட்டாதவன் எனலாமா?

மக்கள் செய்யும்,அச்செயல்களை விலங்குகளும் பறவைகளும் செய்யும்! இவன் மனிதன். மனிதன் என்பான் பகுத்தறிவாம் மனஅறிவு உடையவன். தன்னால் மட்டுமா அவன் வாழ்கிறான்! உலகோர் கொடையால் வாழ்கிறான்! அத்தகையவன் உலகுக்காக வாழவேண்டுமே! பிறருக்கு இயன்ற உதவிபுரிந்து வாழ வேண்டுமே! அவற்றை ஆற்றாதவன் - ஆற்ற விரும்பா தவன் ஆற்ற வாய்த்தும் தவறுபவன் ஆற்றமாட்டாதவன் என்றே பழிக்கப்படுகின்றான்.

ஆற்றமாட்டாதவன் ‘ஆற்றாதான்' என்பார்.

என்பதைத்

திருவள்ளுவர்

உண்ண இல்லேம்; உடுக்க இல்லேம்; உறைய இல்லேம்; கற்க வகை இல்லேம்; தொழில் வாய்ப்பு இல்லேம்; உற்றார் உ உறவு

இல்லேம் என்பார் உலகில் இருந்து எதிர்பார்த்து வாழ்கின்றனரே! அத்தகையர்க்கு உதவுதலை ஆற்றுதல் என்கிறார். இதனை அற்றார்க்கு ஒன்று ஆற்றுதல் என்க. இவ்வாறு ஆற்றாதவனை ‘அற்றார்க்கு ஒன்று ஆற்றாதான்' என்பார் பொய்யா மொழியார்.

ஆற்றுதல் என்பதைக் கலித்தொகை என்னும் நூல், “ஆற்றுதல் என்பது அலந்தவர்க்கு உதவுதல்”

6

என்று கூறும். அலந்தவர் என்பார், இல்லாமையால் வருந்துவார். 'அற்றார்க்கும் அலந்தார்க்கும்' என்பது இணைச் சொல்.