உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 20.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொதுமக்கள் பேச்சில் பொய்யாமொழி

237

இடங்களைப்‘புதைகுழி' என்கின்றனர்; ‘புதை மண்' என்கின்றனர்; ‘புதை மணல்' என்கின்றனர்.

மட்பகை என்பதை அவர்கள் அறிந்த பட்டறிவு கொண்டு பெயர் சூட்டியுள்ளனர். மற்றவர்களும் அப்பொருளை உணர்ந்து கொண்டு நலம்பெற வழிகாட்டுகின்றனர். படியாதவர்கள் மேல் குற்ற மில்லை. இது ‘புதைமண்’ ‘புதை மணல்' என எழுதி யுள்ள பலகையை அறியாமல் வீழ்ந்து படுகின்றனர். படித்தவர்கள் அதனைப் பொருட்டாக எண்ணாமல் உயர்பொருளில் உயர் பொருளாம் உடலையும் உயிரையும் அழித்துக் கொள்கின்றனர்.

மட்பகை என்னும் வள்ளுவச் சொல்விளக்கம், புதைமண் புதைமணல் என்பனவற்றால் எளிமையில் இனிமையாய் விளக்கம் பெறுகின்றதாம். 'பூரியர்கள் ஆழும் அளறு' என்னும் ‘அளறு’ புதை மண்ணேயாம்.

6

முன்னாளில் வஞ்சம் தீர்ப்பதற்கும் தண்டிப்பதற்கும் பயன் படுத்தப்பட்டது அளறு. அதற்கு நரகம் எனவும் பின்னாள் உரை உண்டாயிற்று.

புதைமண், யானையையும் உள்வாங்கும்எனின் மற்றவை உள்விழுந்து மீளுமா? ஒருவர் புதைமண்ணுள் புகுந்ததும் தெரியாமல் போகும். தெரிந்து ஒருவர் போனாலும் அவர் நிலையும் அதுவே. ஆதலால் புதைமண், புதைமணல் எனப் பொதுமக்கள் வழங்கும் ‘புதைகுழி', 'இடுகாடு' 'புதைகாடு' என்பனவும்ஒப்பாக எண்ணத்தக்கனவேயாம்! மட்பகை என்பதற்குப் பொதுமக்கள் படைத்துள்ள படைப்புச் சொற்களை எண்ண எண்ண வியப்பில்லையா?

6