உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 20.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236

இளங்குமரனார் தமிழ் வளம் – 20

29. புதைமண்

பகை என்பது பிரிப்பது பிளப்பது என்னும் பொருளது. அப்பகை அகப்பகை புறப்பகை என்றும் உட் பகை வெளிப்பகை என்றும் இரண்டாகச் சொல்லப் படும்.

மெய்யாகவே பகை என முடிவு செய்யப்பட்டது புறப்பகை அல்லது வெளிப்பகை.

-

அவ்வாறு வெளிப்படத் தோன்றாமல் ஒரு குடும்பமாக - ஒரு தொழிலாக ஓர் உறவாக இருப்பவர் தம் பகையை மறைத்து ஒட்டியிருப்பார் போல் இருந்து சமயம் வாய்க்கும் போது அழிப்பது உட்பகையாம்.

உட்பகை நாட்டைக் கெடுக்கும்; இனத்தைக் கெடுக்கும்; மொழியைக் கெடுக்கும்; குடியையும் கெடுக்கும். இதனால் உட்பகை என்றோர் அதிகாரம் திருக்குறளில் உண்டு.

எள்ளளவு உட்பகை இருப்பினும் பெருங்கேடாம். ஓர் உட்பகை எழுபது கோடி வெளிப்பகையினும் கேடுதரும் என்பது வள்ளுவம்.

“உட்பகை அஞ்சித்தற் காக்க உலைவிடத்து மட்பகையின் மாணத் தெறும்”

என்று உட்பகையின் அழிவை உவமையால் விளக்குவார்.

செப்பும் மூடியும் சேர்ந்திருப்பதுபோல் தோன்றி னாலும் தனித்தனியானவையாம் அவை. அதுபோல் எப்படி வெளிப் படாமல் ஒட்டி இருப்பினும் உட்பகை பிளவுபட்டதே என்றும் கூறுவார்.

மட்பகை யாவது எது என்றால், குயவர் சக்கரத்தின்மேல் வைத்த கலத்தை அறுத்து எடுக்கும் அறுவைக் கருவிக்கு மட்பகை என்பது பெயர் என உரைகண்டனர் முன்னுரைகாரர்களும் பின்னுரைகாரர்களும். ஆனால் திருவள்ளுவர் மண்பகையாவது, காலாழ்களர்' என்பதனால் குறிப்பார். பொதுமக்கள் சில