உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 20.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொதுமக்கள் பேச்சில் பொய்யாமொழி

235

28. சிரித்துக் கெடுத்தல்

நண்பர்களுள் சிலர் இனிக்க இனிக்கப் பேசுவர், சிரிக்கச் சிரிக்கப் பேசுவர்; உள்ளன்பு என்பதோ துளியும் இராது. முகநட்பு அன்றி அகநட்பு அவர் அறியார். இத்தகையவரை

66

‘நகைவகைய ராகிய நட்பு’

என்பார் திருவள்ளுவர். இவர்களால் ஏற்படும் கெடுதலைப் ‘பகைவரால் பத்தடுத்த கோடி யுறும்”

66

என்பார். இந் நட்பினரினும் பகைவர் எவ்வளவோ நல்லவர் என்கிறார்.

பகைவர் கேடு செய்வர் என விழிப்பாக இருக்கலாம். ஆனால் நகைவகையர் நம்பிக்கை யூட்டிக் கெடுப்பவர் ஆயிற்றே. என்ன விழிப்பும் வீழச் செய்வரே!

இனி அழுது கெடுப்பாரும் உளர் என்பதை,

“தொழுத கையுள்ளும் படைஒடுங்கும் ஒன்னார் அழுதகண் ணீரும் அனைத்து”

என்கிறார் திருவள்ளுவர்.

“சிரித்துச் சிரித்தே கழுத்தை அறுப்பான்” என்பர்.

"ஈரத் துணியைக் கழுத்தில் போட்டு இறுக்குவா என்பர். அதற்கு மாறானது அழுது கெடுத்தல். வஞ்ச எண்ணத்தை வழியும் கண்ணீராலேயே நிறைவேற்றிக் கொள்வது. பொய்யை மெய்யாக்க வல்லது பொய்க் கண்ணீர். அதேபொழுதில் மெய்யைப் பொய்யாக்கிக் காணாத தீமையெல்லாம் காண வைப்பதும்அது. அதனால் சிரிக்கும் பெண்ணையும் அழும் ஆணையும் நம்பாதே என்னும் மக்கள் வழக்கும் உண்டாயிற்று. அழுவாரை அன்றித் தொழுது கெடுப்பாரும் கண்கூடு.