உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 20.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234

இளங்குமரனார் தமிழ் வளம் - 20

27. உறவாடிக் கெடுத்தல்

ஒருவரை ஒருவர் பகைத்து அழிப்பதற்குப் பகையாடிக் கெடுத்தல் என்பது பெயர். ஆனால் நட்பாகக்காட்டிக்கெடுப்பதும் உலக வழக்கே. பகையாக இருந்து உறவாக வருவாரிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று திருவள்ளுவர் கூறுவார். “பகைநட்பாம் காலம் வருங்கால் முகம்நட்டு அகநட்பு ஒரீஇ விடல்”

என்பது அது.

தாய்க் கோழி தன் குஞ்சைப் பருந்தினிடம் இருந்து காப்பதற்குக் குரல் கொடுத்து சிறகுள் வைத்துக் காப்பது போல நல்லவர்கள் பொல்லாதவர்களை நம்பிக் கெட்டுப்போகாமல் இருக்க இவ்வழி காட்டி னார் திருவள்ளுவர்.

ம்

பகைவன் நண்பனாக வருவான் எனில், அவனி முகத்தால் நண்பனாகக் காட்டிக்கொள்; ஆனால் உள்ளத்தால் நட்பாளன் என்பதைக் காட்டாமல் ஒதுக்கிவிடு என்றார்.

6

இதனைப் பொதுமக்கள் எவ்வளவு எளிமையாகச் சொல்லி விடுகின்றனர்; உறவாடிக் கெடுத்தல், அடுத்துக் கெடுத்தல் என்பவை அவை.

பு

உறவு என்பது நம்பத்தக்கது.நட்பு என்பது பால் வேறுபாடு அற்ற தூய காதல். காதல் கேடு ஒப்பது இந்நட்புக் கேடு.

உலகில் வாழ்வில் உண்டாகும் கெடுதல்களில் பெரிய கடுதல் நம்பிக் கெடுதலேயாகும். பெரிய பெரிய அரசுகள் வீழ்ச்சியும் நம்பிக் கெட்டது உண்டு. வஞ்சம் கொண்டு கெடுக்க எண்ணும் அமைச்சர் ஒருவனினும், பகையாக இருப்பார் எழுபது கோடிப் பேர் எனினும் கேடு செய்திட மாட்டார் என்பார். நல்லோர் பகை கேடு செய்யாது. ஆனால் நயவஞ்சகம் கெடுக்காமல் ஒழியாது.