உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 20.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42

இளங்குமரனார் தமிழ் வளம் – 20

தலைவன். இது குறுங்குடி மருதனார் என்னும் பெருந்தகைப் புலவர் கண்ட தமிழினியர் உள்ளம் (அகம். 4).

6

நம் உடலில் தினவு வந்தால் சொறிகின்றோமே; நமக்குச் சொறியுமாறு எட்டா இடத்தில் தினவு வந்தால் பிறரைச் சொல்லிச் சொறிந்து கொள்கிறோமே; கையும் இல்லா, பேசும் திறமும் இல்லா விலங்கு களுக்குத் தினவு வந்தால் அவை என்ன செய்யும்? என இரங்கி, ஆடுமாடு செல்லும் வழிகளில் ஆஉறிஞ்சு குற்றியை நட்டு வைக்கிறதே இளகிய தமிழ் நெஞ்சம்!

த்தமிழினிய நெஞ்சங்கள் இன்று என்ன வினாவுகின்றன? ‘அந்த உணர்வு எங்கே?' என நம்மை நோக்கி வினாவுகின்றன? ‘தமிழர்' என்பார் தமிழுணர் வாளராக இருத்தல் அன்றோ!

தமிழினியர் உள்ளத்தைத் தளிர்ப்புடன் சொல்லும் இவ்வேளையிலேயே “கொள்ளும் பொருள் இல்லை என்றாலும் துள்ளும் உடலைக் கண்டு களிப்பதற்காகவே கொல்லும் கொடியரும் இருந்தனர் என்னும் குறிப்பும் இல்லையோ” என்னும் தமிழறிவாளரும் உளர்.

ஆம்! உண்மையே! மறக்கவும் இல்லை! மறுக்க வும் இல்லை! ஆனால் அக்கொடியரைக் ‘கல்லாக் கயவன்' என்றும், 'கல்லாக் களிமகன்' என்றும், 'கல்லினும் வலிய நெஞ்சக் கண்ணிலி' என்றும் இடித்துரைக்கும் சான்றோர் இருந்தனரே! இந்நாளில் அவர் உளரோ?

காடுமை' செய்வாரைக் கொடியர் என்று இடித்துக் கூறும் கொடுமை அறியாச் சான்றோர் உளரோ? நல்லது பாராட்டி அல்லது இடித்துரைக்கும் ஆன்றோரும் உளரோ? உருகி நிற்கும் நெஞ்சும், உருக்காகி நிற்கும் உரமும் ஒருங்கே கொண்ட உயர்ந்தோரும் உளரோ?

என் சாதி, என் சமயம், என் கட்சி என்பதால், என்னென்ன கொடுமை செய்வாரையும் கண்டும் காணாமல் போகும் சார்புக் குருடர் இலரா?

6 என்னலமே என்குறி என்பதால் எத்தகைய கயமை நிகழினும் என்னவென்று கண்டு கொள்ளாமல் ஒட்டிக் கொள்ளும் ஒட்டடைப் பிறவியர் இலரா?

66

என் கூட்டில் உள்ளவனா அவன் தூயன்; மாற்றான் கூட்டில் இருப்பவனா அவன் தீயன்” என்று கண்ணை இறுக