உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 20.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்விச் செல்வம்

41

13. முள்ளும் தைக்கக் கூடாது

'தமிழ்' என்பதற்கு 'இனிமை' என்னும் பொருளை நம் முன்னோர் கண்டனர். அக்காட்சி தேன் பால் அமுது என்றும், இணையில்லா இன்பவீடு என்றும் பொருள் கொள்ளுமாறு புலவர்களைத் தூண்டியது.

‘தமிழர்’ என்பதற்கும் ‘இனியர்' என்னும் பொருள் கிளர்ந்தது. ‘தமிழ் தழீஇய சாயலலர்' என்றார் திருத்தக்க தேவர் (சீவ. 2026). தமிழர் இனியர் என்பதற்குச் சான்று என்ன? அவர் தம் சாயலே - பண்பாடே-நாகரிகமே வாழ்வே - இனியர் என்பதை நிறுவும் சான்று.

-

தமிழர் இனியர் என்பதற்கு வாழ்வுச் சான்று வாய்க்கும் நிலையில்தான் பெருமையுண்டு; பேறும் உண்டு. இல்லையேல் போலிப் புகழும் பொருந்தா உரையுமாய்ப் போயொழியும்.

“கொல்லா நலத்தது நோன்மை; பிறர்தீமை சொல்லா நலத்தது சால்பு’

என்பது வள்ளுவர் கண்ட தமிழினியர் தகைமை.

“வயல் வரப்பில் அமைந்த வளைக்குள் நண்டும் அதன் பெண்டும் உள. வன்மையாய் வரப்பில் அடி வைத்து நடந்தால் அவை அஞ்சிப் பிரிதல் கூடும். ஆதலால் மெல்ல நட” என்றும்,

"பயிரூடு இருந்த குவளை, அல்லிக் களைகளைப் பறித்து வரப்பிலே போட்டுளர். அப் பூக்களை மிதி யாமல் செல்க. னெனில், அதனுள் தேனருந்தப் புகுந்துள்ள ஈக்களைத் துயராக்கும்" என்றும் இயம்புவது இளங்கோவடிகள் தமிழ் நெஞ்சம்.

ஓடும் தேரில் மணி ஒலிக்கிறது.அவ்வொலிக்கு, இணையொடு வாழும் வண்டு அஞ்சுகிறது. ஆதலால், "மணியின் நாவினை ஒலியாமல் இறுக்கிக் கட்டிக் கொண்டு தேரைச் செலுத்துக!” எனத் தன் தேர்ப் பாகனுக்கு ஆணையிடுகிறான் ஒரு தமிழ்த்