உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 20.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40

இளங்குமரனார் தமிழ் வளம் – 20

புலவர் சென்றார்.புலவர் போய் பொழுது பொருள் பெறுவதற்குப் பொருந்தாத பொழுதுதான்! இருப்பினும் அவர்தம் வறுமை அத்தகைய நிலைமையிலும், அவனை விடாமல் இரக்குமாறு செய்தது.

புலவர்க்கு அள்ளி அள்ளி உதவிக் கை சிவந்த வள்ளல் குமணன், தன்னைப் பாடி வந்த புலவர் பரிசில் பெறாமல் மீள வேண்டிய நிலைமை இருப்பதை எண்ணி வருந்தினான்! தன் தலையைக் கொணர்பவர்க்குப் பெருஞ் செல்வம் தருவதாகத் தம்பி அறிவித்து இருப்பதை உணர்ந்தான். ஆதலால், தன் கைவாளைப் புலவர் கையில் தந்து தலைகுனிந்து வெட்டிக் காண்டு போய்த் தம்பியிடம் கொடுத்துப் பொருள் பெற்றுக் காள்ளுமாறு ஏவினான்.சாத்தனார் ஏற்பரோ? ஏற்காவிடினும் க்கொடை தலைக்கொடையல்லவா!

நாட்டுரிமைக்காக எத்துணை நன்மக்கள் தங்கள் உயிரை நல்கினர்! தாயின் மணிக் கொடியைக் காப்பதற்காகத் திருப்பூர் குமரன் தன்னுயிர் தந்து புகழ் கொண்டதை நாடு நன்கு அறியுமே! நாட்டு விடுதலைக் காக வீரபாண்டியக் கட்டபொம்மனும் வீரர் மருது இருவரும் நல்லுயிர் தந்த செய்தியை நானிலம் அறியுமே!

செந்தமிழ் காப்பதற்காகச் செம்மல் சின்னசாமி முதலியோர் செந்தீக்கு இரையாயதைத் தமிழகம் மறக்குமா? தமிழ்நாடு என்னும் பெயரிட வேண்டித் தம்முயிர் தந்த சங்கரலிங்கனார் கொடையைத் தமிழகம் மறக்குமா? பகைவர் படை கொண்டு வந்த போது தம் முயிரைப் பொருட்டாக எண்ணாமல் தாய் நாட்டைக் காக்கத் தங்கள் உயிரை வழங்கிய உரவோர்கள் கொடை ஈடிலாக் கொடை அன்றோ! எவராலும் ஈடு கொடுக்க முடியாத கொடை ஈடிலாக் கொடைதானே! இக் கொடையாளர் புகழ்தானே உலகில் ஈடு இணை அற்றது!