உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 20.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்விச் செல்வம்

39

12. ஈடில்லா ஈகை

ஈகை என்பது கொடை எனப்படும். கொடை மிகச் சிறந்த பண்பாகும். பிறவியிலே வாய்க்கும் பெருங் குணம் ஈகை என்று சான்றோர் கூறுவர். “கொடையும் தயையும் (அருளும்) பிறவிக் குணம்” என்பது அவர்கள் உரை.

பொன்னைக் கொடுப்பதும் கொடையே; பொருளைக் கொடுப்பதும் கொடையே; நல்லுரை வழங்குவதும் நற்றுணை யாவதும் கூடக் கொடையே. ஆனால், அவற்றை ஈடிலாக் கொடை என்று இயம்புதற்கு இயலாது. ஒருவன் தன்னையே கொடுக்கும் கொடையே ஈடிலாக் கொடையாகும்.

பத்தாயிரம் ரூபாயுடன் ஒருவன் காட்டு வழி போகின்றான்; கள்வன் இடைமறித்துக் கொள்கிறான். பணத்தைக் கொடுக் கின்றாயா? உன்னைக் கொலை செய்யவா? என்று கூறினால், அவன் பணத்தைப் பறி கொடுத்தாவது தன் உயிரைக் காத்துக் கொள்ளத் தானே விரும்புவான்? பணத்திற்காகவே ஆள்களைக் கடத்திக் கொண்டு செல்கின்றனரே! இவ்வளவு பணம் தந்தால் உயிரோடு விடுவோம்; இல்லாவிடில் கொன்று விடுவோம் என்று எவ்வளவு கொடுமைப்படுத்துகின்றனர்? பணத்தினும் சிறந்தது உயிர் என்பதால் தானே அவர்கள் கேட்கும் பணத்தைத் தந்து தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்கின்றனர்!

பணம் போனால் தேடிக் கொள்ளலாம். இழந்த தொகைக்கு மேலும் மிகுதியாகத் தேடிக் கொள்ளலாம். ஆனால், உயிரை இழந்தால் இழந்ததுதானே. கவிமணி அவர்கள் கூறுவது போல் “ஒரு வேந்தன் நினைக்கினும்” இழந்த உயிரை மீட்டுக்கொண்டு வர முடியாதே! இவ்வாறாக இருந்தும் அந்த உயிரைக் கொடுக்கும் கொடையாளர்களும் உலகில் உளர் என்றால் அவர்கள் கொடை தானே ஈடிலாக் கொடை!

பொருட் செல்வத்தைப் போற்றாமல் கொடுத்த வள்ளல் குமணன். அவன் நாடு இழந்து காடு புகுந்து வாழ்ந்தான். அவனைக் காணுதற்குப் பெருந்தலைச் சாத்தனார்' என்னும்