உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 20.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38

இளங்குமரனார் தமிழ் வளம் – 20

கோடி கோடிப் பேர்களைக் கெடுப்பதும் பொருளே! கோடி கோடிப் பேர்களை வாழ வைப்பதும் பொருளே. ஆனால், அறவழியில் வந்த பொருளும் அறநெறியாளர் கையில் உள்ள பொருளும் நாட்டின் அழிவுக்கு ஒரு நாளும் பயன்பட மாட்டா அப்படிப் பயன்பட்டால் அவை நல்லோர் பொருள் அல்ல! நச்சுத் தன்மையர் பொருள் எனப்படும்.