உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 20.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்விச் செல்வம்

37

அழித்துக் கொண்டும் தணியா நலங்களைப் பிறர்க்குச் செய்யும் பெருமை வாய்ந்தது அது.

இனிமருந்துச்செடியாகட்டும், பழமரமா கட்டும், ஊருணியா கட்டும் இவற்றுக்கெல்லாம் வாழ் வளிக்கும் சிறப்புடையது மழை! அம் மழைபோன்றது பேருணர்வாளர் செல்வம்.

மழை இன்ன இடத்துப் பெய்யவேண்டும் என்று எண்ணிப் பெய்கின்றதா? இன்ன அளவு பெய்ய வேண் டும் என்று எண்ணிப் பெய்கின்றதா? இன்ன பொழுதில் பெய்ய வேண்டும் என்று எண்ணிப் பெய்கின்றதா? இன்னாருக்குத் தான் பெய்ய வேண்டும் என்றாவது கருதிப் பெய்கின்றது? மீண்டும் கிடைக்கும் என்றோ புகழ்ச்சி கிடைக்கும் என்றோ பெய்கின்றதா? எதுவும் இல்லை.

“எதைப் பற்றியும் கருதாமல் பொழிவது என்கடன்; அவ்வளவே என் வேட்கை! அதன் பயனைப் பற்றி எனக்கு என்ன கவலை?” என்று பெய்கின்றது! இத்தகைய கைம்மாறு கருதாது பொழியும் மழைக்கு இந்த உலகம் என்னதான் செய்துவிட முடியும்?

ம்மழையைப் போல் தம் செல்வத்தை வழங்கும் வளியோர்க்கும் நாமோ இவ்வுலகமோ என்ன கைம்மாறு செய்துவிடமுடியும்? கைம்மாறு வேண்டி நிற்பவர்கள் அல்லவா கைம்மாற்றைப் பெறுவர்! ஆனால் கைம்மாறு கருதாத அவர்களையும் கவிஞர்கள் விட்டு விடவில்லை!

"பாரி! பாரி! என்று கொடைக்கு உன்னையே புகழ்கிறார்கள்! மாரி என ஒன்று இருப்பதை மறந்தே போனார்களே” என்று எவ்வளவு நயமாகப் பாடியுள்ளார் கபிலர். "மாரி ஈகை மறப்போர் மலையன்” என்று மலையமான் திருமுடிக் காரியைப் பாடுகிறாரே ஒரு புலவர்! இப்படி எத்துணையோ மழையன்ன செல்வர்கள் இலக்கிய உலகிலும், நேரிடை உலகிலும் காணப் பெறுகின்றனர்! அவர்கள் பெற்ற இப்பேறு பொருட்பயன் அல்லவா!

தீயவர்பொருள் நச்சுக் குண்டாக, நலிக்கும் கருவியாக, மயக்கும் மதுவாக, மாய்க்கும் ஆட்டமாக ஒழிகின்றது. நல்லவர் பொருள் கலைக் கூட மாக, மருத்துவமனையாக, சாலையாக, சோலையாக விளங்குகின்றது.