உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 20.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்விச் செல்வம்

55

ஊற்றெடுக்க உறவாடினார். உரிமை அன்பில் உருகினார். அந்நிலையில் ஆதனுங்கன். “எம்மை உள்ளுமோ” (எம்மை நினைப்பீரோ) என வினாவினான். அவ்வினாவினால், ஆத்திரையர் வியப்பும் விம்மிதமும் ஒருங்கே எய்தினார்.

"வேந்தே! நின்னை நினைப்பது எப்படி?

நின்னை மறந்தால் அன்றோ நினைக்க முடியும்?

மன்னவ! நுண்ணிய கருவி கொண்டு என் நெஞ்சைத் திறந்து காணவல்லார் ஒருவர் உளராயின் அவர் அங்கே என்ன காண்பார் என்பதை நீ அறிவையோ? நின்னையே காண்பார்!

இன்னும் கேள்:

நீ

என்னினும் எனக்கு இனியவனே, நீ வினவியவாறு நின்னை மறக்கும் நாளும் உண்டு! அது எந்நாள்?

என்னை நானே மறந்தொழிவதாகிய நாள் அது! ஆம்; நான் இறக்கும் நாள் அந்நாள்! என்னை மறக்கும் அப்பொழுதில் எப்படி நின்னை நினைப்பேன்?

அண்ணலே! அம்மறப்புக்கு யான் என்ன செய்வேன்? அம்மறப்பும் இல்லாதொழிய வழிவகை உண்டோ? ஏங்குகிறேன்! ரங்கத்தக்க அந்நிலையில் யான் என்ன செய்தல் கூடும்? இயம்புக” என்றார்!

“எந்தை வாழி! ஆத னுங்க! என்

நெஞ்சம் திறப்போர் நின்காண் குவரே;

நின்னியான் மறப்பின் மறக்கும் காலை

என்னுயிர் யாக்கையின் பிரியும் பொழுதும்

என்னியான் மறப்பின் மறக்குவென்”

என்பது ஆத்திரையனார் வாக்கு (புறநானூறு. 175)

அரசன் ஆதனுங்கன்; புலவர் ஆத்திரையனார்.

புரவலன் ஒருவன். இரவலர் ஒருவர்.

மாட மாளிகையன் ஒருவன்; கூரைக் குடிசையர் ஒருவர்.

அண்ணல்யானை,அணிதேர்ப் புரவி ஆட்பெரும்படையன் ஒருவன். ஏடு எழுத்தாணி என வாழும் பாடுதொழிலர் ஒருவர்.