உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 20.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54

இளங்குமரனார் தமிழ் வளம் – 20

வேற்றுமை

நட்போ பருவ வேற்றுமை பால் இவற்றிடையேயும் இனிதின் அரும்பி இலங்கும் இயல்பினது. காதலோ, புலக்குறும்புக்கு ஓரளவேனும் இடம் தாராது ஒழிவது இல்லை.

நட்போ, புலக்குறும்பு புகுதலும் அறியாப் பொறுப்பில்

ஓங்குவது.

இவற்றால், காதலையும் வெற்றி கண்டு விடும் போலும் கனிந்து வளர் நட்பு!

இயற்கைக் காதலும் இனிய நட்பும் முரண்படுபவை போலத் தோன்றினும் இணையானவையே. நட்பு, காதலாம். காதல், நட்பாம். புறப்படும் இடம், போகும் தடம் இவற்றால் சிலச்சில வேறுபாடுகளை யுடையவை எனினும் முடிவில் இரண்டும் ஒன்றான வையே. இத்தகை யதை ‘நட்புக் காதல் என்பதா, ‘காதல் நட்பு' என்பதா? எப்படி உரைப்பினும் ஒப்புக் கொள்பவை அவை.

உயர்வற உயர்ந்த ஒரு நட்புக் காதல்.

சென்னை நகரின் ஒருபகுதி நுங்கன்பாக்கம். அது, நுங்கன் என்பான் ஒருவன் பெயரால் அமைந்த பழைமையானதோர் ஊர். சங்க நாளில் வேங்கட மலைப்பகுதியைப் பாங்குடன் ஆட்சி செய்த வேந்தன் ஒருவன் பெயர் நுங்கன். அவன் தந்தை ஆதன். ஆதலால், அவன் ‘ஆதனுங்கன்' என வழங்கப்பட்டன.

ஆதனுங்கன் அருங்கொடையாளன்.

அறிவறிந்த பண்பாளன்; புலவர் தோழமைப் புகழாளன்; அவன் பண்பிலே ஊன்றிப் பாடிய புலவர் ஆத்திரையன் என்பார். அவர் கள்ளில் என்னும் ஊரினர். ஆதலால், கள்ளில் ஆத்திரையனார் என வழங்கப்பட்டார்.

ஆத்திரையனார் ஆதனுங்கனை ஒருநாள் கண்டார்; களிப்புற்றார்; இருவரும் பெருநண்பினர் ஆயினர். புலவரைப் பிரிய விரும்பாப் பெருநிலையாளனாகத் திகழ்ந்தான். அவன் விருப்பும், விழுமிய அன்பும் புலவர் உள்ளத்தைக் கொள்ளை காண்ட ன.

ஆத்திரையனார் ஆதனுங்கனை நினைந்து நினைந்து உணர்ந்து உணர்ந்து மகிழ்ந்தார். “உள்ளு தோறும்” உவகை