உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 20.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்விச் செல்வம்

53

அவள்

சோறு கையைச் சுடவில்லை. நெஞ்சைச் சுட்டு விடுமாம். அப்பஞ்சின் மெல்லியலாளின் நெஞ்சச் சூடு, நெஞ்சம்கவர் கள்வனாக வீற்றிருக்கும் நேயக் காதலனைச் சுட்டு விடுமாம்! ‘அவன் வெந்து விடக் கூடாதே' என நொந்து சுடு சோற்றை அவள் உண்ண வில்லையாம். வள்ளுவர் வரைந்த நெஞ்சக் காதல் கொஞ்சிக்குலவும் ஓவியங்களுள் ஈதொன்று!

அவன் எழுதுகிறான் ஓர் ஓவியம். சுவரிலா? இரட்டுத் துணியிலா? தாளிலா? இல்லை. உள்ளத் திரையில் உவகையால் எழுதுகின்றான்.

தண்ணீர் வண்ணமோ எண்ணெய் வண்ணமோ எடாமல் தண்ணிய எண்ண வண்ணம் ததும்ப எழுதுகிறான் ஓவியம். எழுதுவதும் எப்படி?

66

அழகு என்றால் அழகு இதுவே அழகு!" என்று சொக்குமாறு அந்தச் சொக்கன் தன் சொக்கியை எழுதுகின்றான். அப்படிச் ‘சொக்குப் பொடி' போட்டு மயக்கியிருக்கிறாள் அச் சொக்கி!

எழுதப்பட்ட ஓவியம் எவருக்கோ எழுதப்பட்டதோ? இல்லை! அவனுக்கு என்றே எழுதப்பட்டது. அதனையும் மூடிமறைத்துப் பொதிந்து வைத்துக் கொள்ளாமல் இமைத்த கண் மூடாமல் 'இமையா நாட்டப் பெரியோனாய்' நோக்கிக் கொண்டிருத்தற்கே எழுதுகிறான்.

சித்திரத்தில் மலர்ந்த செந்தாமரை சிரிக்குமா?

ஓவியத்தில் உள்ளவள் ஓடி ஆடிக் களிப்பாளா?

அவள் உயிர் ஓவியமாக விளங்குகிறாள். ஆகலின் காண்கிறாள்; களிக்கிறாள்; நோக்குகிறாள்; நோக்கெதிர் நோக்குகிறாள்; தாக்கணங்காக விளங்குகிறாள். அவள் “ஒருவன் திருவுள்ளத்தில் அழகு ஒழுக எழுதிப் பார்த்திருக்கும் உயிர் ஓவிய”மாகத் திகழ்கிறாள். குமரகுருபரர் குறித்த தெய்வக் காதல் நெஞ்ச ஓவியங் களுள் ஈதொன்று.

நெஞ்சம் காதலுக்குத் தானா உறையுள்? சிலர் கொண்டுள்ள சீரிய நட்பு செவ்விய காதலையும் வென்று விடுமோ?

காதல், பருவ ஒற்றுமை பால்வேற்றுமை இவற் றிடையே அரும்பி வளர்வது.