உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 20.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52

இளங்குமரனார் தமிழ் வளம் – 20

15. நெஞ்சுள் இருப்பவன்

நெஞ்சுக்கு உலகம் தரும் மதிப்பு மிகுதி.

வாழ்வையே ‘மனம் போல வாழ்வு' என்பர்.

திருமணத்தை ‘இருமனம் கூடினால் திருமணம்' என்பர். நெஞ்சே நேரான சான்று என்பதை, "நெஞ்சை ஒளித்தொரு வஞ்சகம் இல்லை" என்பதால் குறிப்பர்.

பொய் கூறுதலை விலக்குவாரும், “நெஞ்சாரப் பொய் தன்னைச் சொல்ல வேண்டா” என்பர்.

வெறுங் கல்வியுடையவனை, “நெஞ்சிலக்கணம்அறியாதவன் பஞ்சலக்கணம் அறிந்தும் பயனென்ன?” என இழித்துரைப்பர்.

66

அழகாவது நெஞ்சத்து அழகே” என அறுதியிட்டு

உரைப்பர்.

முறைமையை வேண்டுவாரும் “நெஞ்சிலே கை வைத்துக் கூறு” என்று ஆணை இடுவர்.

"நெஞ்சினால் பிழைப்பு இலாள்' கழுவாய்க்கு நெஞ்சு உதவுதலையும் கூறுவர்.

எனப் பாவக்

மெய்யுணர்வுப் பெருக்கால் “நெஞ்சம் பெருங் கோயிலாகக் கண்டு நெஞ்சம் உமக்கே” என இறைப்படையலாக்கி இறைஞ்சுவர்.

இன்னவை எல்லாம் நெஞ்சுக்கு உலகம் தரும் மதிப்பின் சான்றுகளேயாகும். ஆனால் பலர் வாழ்வில், “நெஞ்சு என்பதொன்றும் உண்டோ?” என்பது வினாவுக்குரிய தாகவே உள்ளது.

சுடுசோற்றை அள்ளினாள் ஒரு தலைவி. அள்ளியதை அப்படியே தட்டத்தில் போட்டாள். ஏன்? கை சுட்டு விட்டதா? இல்லை! சுடு நெருப்பிலே சோறாக்கிச் சுடச்சுட வடித்துச் சூட்டிலே இறக்கிச் சுவைப்படுத்தத் தேர்ந்த அவள் கை, சூட்டைத் தாங்காமலா போய்விடும்?