உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 20.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்விச் செல்வம்

51

ஒருவன் தன் வாழ்நாளை மற்றொருவனுக்குத் தந்து வாழ வைக்கவும் முடியுமோ? 'முடியும்' என ஓரிரு சான்று காட்டுவார் காட்டுக. 'முடியாது' என நாட்டுவார் நாட்டுக!

நெஞ்சார்ந்த உணர்வோடு தன் வாழ் நாளைத் தருதற்கும் முந்து வந்து நின்றானே அந்த வேந்தன் கிள்ளிவளவன் அந்த உணர்வு எளிதில் உண்டா வதோ?

அலுவலக ஊழியனை அலுவலகத் தலைமையன் ஒருவன் இவ்வாறு நெஞ்சாரப் பாராட்டும் நிலைமை உண்டா? அதுவே அரிதாம் எனின், ஆட்சியில் அமர்ந்தோன்தானா, தன் ஆளுகைக்கு உட்பட்டோனைப் பாடிப் பரவுவான்! பாராட்டிப் போற்றுவான்!

பண்ணனைப் பாணாற்றுப்படை பாடிப் பரவிய சோழன் கிள்ளி வளவனின் “அந்த உணர்வு எங்கே? எங்கே?" என் நம்முள் வினா எழுகின்றது அன்றோ!