உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 20.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50

இளங்குமரனார் தமிழ் வளம் – 20

நல்லோனைப் பண்ணன் என்றது எத்தகைய பொருத்தம்! பண்ணன் வாழ்க! பண்ணவன் வாழ்க! பண்ணையாளனாம் பண்பாளன் வாழ்க!

மருத்துவர் என்ன செய்கிறார்? உடற் பிணியைத் தீர்க்கிறார். அப்பிணி தீர்ந்தார்க்கும், பிணி இல் லார்க்கும் தீராப் பிணியாக இருப்பது அன்றோ பசிப்பிணி; அப்பசி, பிணியா? பாழும் பாவி! அப் பாவியின் பிடியில் சிக்குண்டவர் அடையும் துயர்க்கு அளவும் உண்டோ?

பசிப்பிணி தீர்ப்போர் அறவோர்; அவர், பிறரையும் அறவோர் ஆக்கும் உயர் அறவோர்!

பசிப்பிணி தீர்த்தல் என்பது சோம்பர்களையும் தடியர் களையும் உருவாக்குவது அன்று. அதனைச் செய்யின் சட்டி தூக்கிச் சாய்ந்தழியும் கூட்டமே பெருகும்; நாட்டைக் கெடுக்கும்; உழைப்பவரையும் உழைப்பில் நம்பிக்கை இழக்கச் செய்து ஒழிக்கும்.

இப்பண்ணன் பணி, கேட்டைப் பெருக்கும் பணி யன்று; நாட்டைக் காக்கும் பணி. உழைத்து உழைத்து உருக்குலைவோர் வாட்டம் போக்கும் வளப்பணி. ஆதலால் இப்பணி வாழ்க! இப் பணியாளன் வாழ்க!

இவனை, 'நீடு வாழ்க' என்பேனா? வாழ்த்து என்பதே

அதுதானே!

காவலன் கடபை மையை ஆவலுடன் தானே லுடன் தானே தாங்கிக் கண்ணெனக் குடிகளைக் காக்கும் இவன், ஒரு சிறந்த காவலன்! ஆதலால் காவலனாம் என் வாழ்நாளையும் இவனே கொண்டு நெடுங்காலம் வாழ்வானாக!

என் வாழ்நாள் அளவு எவ்வளவு? எனக்குத் தெரியாது. ஆனால் அதனை முழுமையாக வழங்க உடன்படு கின்றது என் உள்ளம். என்னால் முடிவது அதுவே. இதனை நன்றியுணர்வால் கூறுகிறேன் என்பது இல்லை. நாட்டு வேந்தனாம் நான் பட்டுள்ள கடனைத்தீர்ப்பதற்காகக்கூறுகிறேன்.என் வாழ்நாளையும் இவனே கொண்டு வாழ்வானாக!

6

“யான் வாழும் நாளும் பண்ணன் வாழிய!”