உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 20.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

2. இருசொல் அழகு

முன்னுரை

இருசொல் அலங்காரம்” (அழகு) என்பதொரு சிறு சுவடி, அது 1886 ஆம் ஆண்டில் சென்னை சகல கலா நிலைய அச்சுக் கூடத்தில் அச்சிட்டு வெளிவந் துள்ளது.

இந்நூலின் ஆசிரியர் பெயர் குறிக்கப்படவில்லை. திருமயிலை வைதிலிங்க தேசிகரால் பார்வையிடப்பட்டது என்றும், கணலூர் கிருஷ்ணப்ப செட்டியா ரால் பதிப்பிக்கப்பட்டது என்றும் முகப்பில் குறிப்புகள் உள.

இருசொல் அலங்காரம் என்னும் பெயருடைய இந்நூலின் இறுதியில், முச்சொல் அலங்காரம் என்ப தும் இணைக்கப் பட்டுள்ளது. முன்னதில் 105, பின்ன தில் 10 என 115 அலங்காரத் தொடர்களைக் கொண்டுள்ளது.

35 -

சிதைவுடன் கிடைத்த இந்நூலில் முதல் 35 அலங்காரங்களும் பின் 62 முதல் இறுதி வரையும் உள்ள வையே கிடைத்தன. 35 “ஊர்ப்பன்றி கொழுப்பதேன் - உள்ளம் மயங்கித்தி” என்பதன் பின் “சித்திரம் பொன்னிற மாவதேன் என்னும் 62 ஆம் அலங்காரம் உள்ளது. ஆகவே 26 அலங்காரங்கள் கிட்டவில்லை. கிட்டியவை ச்சுவடியில் உள்ளன.

இருசொல் அலங்காரம் ஒரு நெறிமுறையை மேற் காண்டுள்ளது. அகரத்தில் தொடங்கி ஆத்திசூடி, கொன்றை வேந்தன் என்பவைபோல அகர நிரலில் செல்கின்றது. ஆதலால் ஊர் என்பது முதல், சித்திரம் என்பது முடிய உள்ளவை எவை என அறியக் கூட வில்லை. சிதைவில்லாநூல் எவரிடமேனும் எங்கேனும் கிடைப்பின் முழுமையாகக் கூடும்.

இப்படியொரு நூல் உண்டு என்பது அறியாத என் இளமைப் பருவத்தில் இவ்வலங்காரத்தில் வருவன போன்ற தொடர்களைக்

-