உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 20.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58

> இளங்குமரனார் தமிழ் வளம் – 20

கேட்டு மகிழ்ந்துள்ளேன். இதனை அந்நாளில் எனக்குச் சொல்லிக் காட்டிய வர்கள், என் ஆசிரியர்களும் அல்லர்; கற்றுத் தெளிந்த தேர்ச்சியரும் அல்லர். உழவு வேலையில் ஈடுபட்டுள்ள ஒரு வேலைக்காரர் சொன்னார்; திகைப்பும் வியப்பும் ஊட்டினார்.

யான்,நான்கு, ஐந்தாம் வகுப்புப் படிக்கும் காலம். ஆதலால் சுவையான செய்திகளைக் கேட்டுக் கொண்ட அளவில் நில்லாமல் உடன் மாணவர்களுக்குக் கூறி, அவர்களைத் திகைப்பிலும் வியப்பிலும் ஆழ்த்துவதில் பெருமிதம் கொள்ளும் பருவம். அதனைச் செய்த என் இளந்தைப் பருவத்தை எண்ணிப் பார்க்க ன்றும் நகைப்பாக உள்ளது.

ஆலிலை உதிர்வதேன்?

இராவழி நடப்பதேன்?

இவ்விரண்டு வினாக்களுக்கும் பொருத்தமாக ஒரே சொல் அல்லது ஒரே தொடர் விடையாக வரவேண் டும். விடை புரியாத நிலையில் இப்படி இருக்குமா, அப்படி இருக்குமா எனத் திகைப்பும், அப்படியொரு விடை கிடைத்துவிட்டால் வியப்பும் ஏற்படுதல் கண்கூடு.

இத் தொடரைக் கூறியவர் திகைப்பூட்டினார். விடை சொல்லத் தெரியாது என்று அறிந்து கொண்ட பூரிப்பாலும் தமக்குத் தெரியும் என்னும் பெருமிதத் தாலும் விடை கூறினார். “பறிப்பாரற்று; பறிப்பாரற்று”

என்பது விடை.

ஆலிலையைப் பறித்திருந்தால் பழுத்துத்தானே உதிர்ந்திராது. இரவுப்பொழுதில் நடந்தால், உள்ள வற்றைப்பறித்துக் கொள்ளும் திருடர்களுக்கு ஆட்பட்டு இழக்க நேரும் என்றால் இரவு வழிநடை கொள்ளமாட்டார். ஆதலால் பறிக்கும் திருடர் ஆங்கு இல்லை. இரண்டு வினாக்களுக்கும் வாய்த்த விடை“பறிப்பாரற்று, பறிப்பாரற்று”என்பது பொருந்தி அமைவதாயிற்று.

“பாறை இடிவதேன்?

பாம்பு ஓடுவதேன்?”

என்பது இன்னோர் இருசொல் அழகு. இதன் விடை,