உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 20.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

இருசொல் அழகு

‘அடிப்பா ரற்று; அடிப்பா ரற்று

என்பதாம்.

59

பாறையின் அடிப்பகுதி அற்றமையால் இடிந்தது (அடி பார் - அற்று); அடிப்பவர் இல்லாமையால் பாம்பு ஓடுகிறது. அடிப்பவர் இருந்தால் அடிபட்டு ஓடாதிருக்கும் (அடிப்பார் - அற்று) - என்பதாம்.

அடிப் பாறை என்பதை அடிப் பார் எனலாமா? எனின், அவ்வாறு சொற்பிழை, வினாவிடைத் தொடர் புப் பிழை என்பவை போற்றப்படாத அமைப்பு, இவ்வமைப்பு, என்பதும் அறிய வேண்டும். எல்லாமும் அப்படியோ எனின், அப்படி இல்லாமல் சீரிய அமைப் பினதும் உண்டு என்பதும், மொழிப் பிழை பற்றிப் பெரிதும் கருதாமல் சொற்சுவை கருதிய அமைப்பு அது என்பதும் தகும்.

66

'ஆலிலை உதிர்வதேன்?

ஆவின்கன்று சாவதேன்?”

என்பதும் இளந்தையில் யான் கேட்டறிந்த தொடர்

இதே, ஆலிலை உதிர்வதேன்? என்ற வினாவும், அதற்கு விடையும் உண்டே எனின், அவ்விடை இதனைத் தொடராாமல் வேறு விடை உண்டு எனக் கொள்ள வேண்டும். அவ்விடை,

“பாலற்று, பாலற்று

99

என்பது. இலையின் பசுமை மாறிப் பழுப்பு அமைய மூலமாவது ஆலின் உயிரூட்டமான பால். அப் பால் வரவு அற்றுப் போனதால் பழுத்து உதிர்ந்தது. கன்றுக் குட்டிக்குப் பால் விடாமல் கறப்பதனால் அது செத்து விட்டது. ஆகவே “பாலற்று” என்னும் விடை இரண் டற்கும் பொதுவாயிற்று.

இதனால்

ஆலிலை பற்றிய இரண்டு இருசொல் அலங்கா ரங்கள் யான் கேட்டவைபோல் இங்கும் இரண்டு உள்ளன. ஆனால் நடைமாற்றமும், விடைமாற்றமும் உள்ளன. ஆங்காங்கு வழங்கியவற்றையும், தாம் அமைத்தவற்றையும் சுவடியாக்கி வெளியிட் டுள்ளார் பதிப்பாசிரியர் என்பது புலப்படுகின்றது.