உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 20.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60

இளங்குமரனார் தமிழ் வளம் – 20

ஆசிரியர் தொல்காப்பியர் முதுசொல், பிசி என்பவை, பழமொழி எனவும், பிதிர் (புதிர், விடுகதை, அழிகதை) எனவும் கூறுவன இன்றும் மக்கள் வழக்கில் மாறா இளமையாய்ப் போற்றப் பட்டே வருகின்றன. அப் பிசி வகையைச் சார்ந்ததே இவ்விருசொல் அழகு என்க.

ஒரு புலவர் ஒரு வள்ளலைப் பாடினார். வள்ளல் புலவர்க்கு ஒரு குதிரையை வழங்கினார். புலவர் குதிரையோடு வந்தார். வளமான வளர்ப்பிலே இருந்த அது, வறுமைப் புலவர் வளர்ப்பில் மெலிந்து உயிரையும் விட்டது. அவர், “பரிசாகப் பெற்றேன்; பரிசாகப் பெற்றேன்” என்றார். “பரிசு -ஆக - பெற்றேன்” “பரி - சாகப் பெற்றேன்.”

என இருவகையாகப் பிரிந்து நின்று பொருள் தருவது “இரட்டுறல்” (சிலேடை) என்னும் அணிநலம் பெறுவதாம். ஆதலால், இரட்டுறல் அணியை அறி வார்க்கு, இருசொல் அலங்கார அமைப்பு பொது மக்கள் வாயில் இயல்பாக வழங்கப் பட்டஅமைப்பு என்பது புலப்படும்.

ஒரு பெரியவர் கைத்தடியோடு வந்தார். எங்கேயோ வைத்துவிட்டுத் தேடினார். ஒரு பாட்டியிடம் “பிரம்பு* (கைக்கம்பு) இருக்கிறதா என்றார். அவர் இயல்பை அறிந்த பாட்டி,பிரம்பு இல்லை என்பதை, “உனக்கு உள்ளம்பு இருந்தால் தானே பிரம்பும் இருக்கும்” என்றார்.

66

உள்ளன்பு இருந்தால்தானே பிறர் அன்பும் இருக்கும்’ என்பது கொச்சை அல்லது பிழை வடிவில் அவர் வாயில் இருந்து வெளிப்பட்டாலும் எவ்வளவோ பெரிய பண்பாட்டியல் ஓவியக் காட்சியாக அவர் வாய் வழியே தீட்டிக் காட்டப்பட்டு விட்டது அல்லவா!

L

இம் மண்ணின் மைந்தர் மணமே இருசொல் அலங்காரம் எனப் புலவர்களுக்கு வழிகாட்டியது என உணரலாம்.

தனை இந்நாளில் தமிழ் மண்ணுக்கு வழங்குபவர், மாணவர் பதிப்பக உரிமையாளர் திருவாட்டி இ. வளர்மதியர் என்பதும் நயத்தக்க பொருத்த மானவை எனப் பாராட்டி மகிழ்கிறேன்.

அன்புடன் இரா.இளங்குமரன்