உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 21.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94

இளங்குமரனார் தமிழ் வளம் - 21

சேனாவரையமும். (1868) நான்கு ஆண்டுகளுக்கு முன்னரே தொல் பொருளும் (1885) தாமோதரரால் அச்சேற்றப்பட்டு விட்டன. அவ்வகையில் சங்கநூற்பதிப்பு முன்னோடி தாமோதரனார். ஆதலாலேதான், திரு.வி.க. வரிசை கண்டு உரைத்தார்.

ஊக்கர்:

ல்

தாமோதரனார் கும்பகோணத்தில் வந்து வழக்கறிஞர் தொழில் நடாத்த விரும்பினார். அக்காலத்தில் பெரும் பேராசிரியர் உ.வே. சாமிநாதர் கும்பகோணத்திலேயே பணிசெய்து வந்தார். செய்தியை அறிந்து மகிழ்ந்தார். "பழைய நூல்களை ஆராய்வாரும் படிப்பாரும் இல்லாமல் பிற்கால நூல்களையே படிப்பவர்கள் மலிந்த தமிழ்நாட்டில் எனக்குத் துணை செய்வார் ஒருவரும் இல்லை.நானோ அந்த ஆராய்ச்சியில் நூதனமாகப் புகுந்தவன். ஆனாலும், எப்படியாவது விஷயத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆவல் மாத்திரம் மட்டுக்கு மிஞ்சியிருந்தது. இந்த நிலையில் பழங்காலத்துத் தமிழ் நூல்களை அச்சிடும் விஷயத்தில் ஊக்கமுள்ள ஒருவர் கும்பகோணத்துக்கு வரப்போகிறார் என்று அறிந்தவுடன் எனக்கு மகிழ்ச்சி உண்டாயிற்று' என்று இதனை என் சரிதத்தில் எழுதுகின்றார் (760). (இதனொடும் இதன் தொடர்ச்சியும் வரலாற்று இணைப்பில் உண்டு).

தன்னந்தனியர்:

பதிப்புத் துறையில் சாமிநாதர்க்குப் பின்வரிசையில் வந்த வையாபுரியார் தாமோதரரை எப்படிப் பார்க்கிறார்:

"ஸ்ரீ ஆறுமுக நாவலர் சைவ சமய நூல்கள் குறள் பாரதம் வெளியிடுவதோடு அமைந்துவிட்டார்கள்.

வித்துவான் தாண்டவராய முதலியார் திவாகரம் முதலிய நூல்களையும், பள்ளி மாணவர்களுக்கு வேண்டும் வசன நூல்களையும், அச்சியற்றுவதில் ஒடுங்கி விட்டார்கள்.

மழவை மகாலிங்கையர் தொல்காப்பியம் எழுத்ததி காரத்தை நச்சினார்க்கினியர் உரையோடு பதிப்பித்து வேறு சில நூல்களையும் வெளியிட்டு, அத்துடன் நின்று விட்டார்கள்.

களத்தூர் வேதகிரி முதலியார் நாலடி, நைடதம் முதலிய நூல்களை வெளியிட்டு, அவ்வளவில் திருப்தியுற்றார்கள்.