உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 21.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. வரலாற்று முன்னோட்டம்

பதிப்பு மாளிகை:

'பழந்தமிழ் இலக்கிய' வெளியீட்டுக்குக் கால் கொண்டவர் ஆறுமுக நாவலர்;சுவர் எழுப்பியவர் தாமோதரம்பிள்ளை; கூரை வேய்ந்து நிலையம் கோலியவர் சாமிநாத ஐயர்" என்று தமிழ்த் தென்றல் திரு.வி.க. தம் வாழ்க்கைக் குறிப்பில் வரைகின்றார். சாமிநாதரைப் பற்றி எழுதவரும் அவர் அவர்க்கு முன்னோடி களைத் தெளிவாகச் சுட்டி வரிசை பாராட்டுகிறார் (வா.கு.160)

பதிப்புத் துறையிலே ஈடுபட்ட வையாபுரியாரைச் சுட்டும் இடத்தில் "இப்பொழுது வையாபுரிப்பிள்ளை தமிழ் நாட்டுப் பதிப்பாசிரியர் உலகிலே ஒரு வான்மணி எனத் திகழ்கிறார்; ஆறுமுக நாவலர், தாமோதரம் பிள்ளை, சாமிநாத ஐயர் ஆகியவர் இனத்தில் சேர்ந்தவரானார்' என அவ்வரிசை மாறாமல் வரிசையைப் பெருக்குகிறார் (வா.கு.208)

நினைவுக்குறி:

சைவசித்தாந்த சமாசத்தின் அடக்கவிலைப் பதிப்புக்குக் கால்கோள் செய்து நடாத்தியவர் கிழக்கு மருதூர் நாராயண சாமி. அவர் திரு.வி.க. வை வழிகாட்டியாகக் கொண்டவர். சங்க இலக்கியப் பதிப்பைத் திரு.வி.க. நினைவுக்குறியாக்க அவர் விரும்பினார். ஆனால் திரு.வி.க. "உம் தந்தையார் நினைவுக்கோ தாமோதரம்பிள்ளை நினைவுக்கோ பதிப்பை அர்ப்பணம் செய்யுங்கள்" என்றார் (வா.கு.945)

ஏன் தாமோதரனைச் சுட்டினார் திரு.வி.க.?

முன்னோடி:

பாட்டு, தொகை ஆகிய சங்கநூல்களுள் பாட்டு 1889 இல் உ.வே. சாமிநாதரால் வெளியிடப்பட்டது. ஆனால், எட்டுத் தொகையுள் ஒன்றாகிய கலித்தொகை அதற்கு ஈராண்டுகளின் முன்னரே (1887) வெளியிடப்பட்டு விட்டது தாமோதரரால். அன்றியும் அதற்கு இருபத்தோராண்டுகளின் முன்னரே தொல்,