உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 21.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. வரலாற்றுச் சுருக்கம்

ஈழம்:

ஈழம், பொன்; இருக்கும் திசையால் 'தென்னிலங்கை' எனப்பட்டாலும் வளத்தால், பொன்னிலங்கை, எனவே, பழந்தமிழ் நூல்களாலும், வடமொழி நூல்களாலும் பாராட்டப்பட்டது.

ஈழந்தந்த தமிழ்ப் பொன்கள் பலப்பல. சங்கப் புலவராகத் திகழ்ந்த ஈழத்துப் பூதன் தேவனார் சங்க நூல் என்னும் தங்க நூல் பேழையுள் இடம் பெற்றவர். அவரனையார் அன்று தொட்டே இருந்தனர். எதனால்?

ஈழம், தமிழ் மண்; தமிழர், மண்; தொல்பழந்தமிழர் மண். பழந்தமிழ்க்குமரிக்கண்டம் ஆழிப்பேரலையால் அழிந்து போன காலத்தில், அழிந்த தென்வளம், 'என்வளம் காணீர்' என்பதை இற்றை நாள்வரை கைம்மேல் கனியாகக் காட்டி வரும் மண்.

பின்னாளை வந்தேறிகளால், முன்னாளை நிலைத் தமிழர், ஆற்றா அவலத்திற்கு ஆட்பட்டாலும் 'புறநானூற்று வீறு பொய்க்கவில்லை' என்பதை நிலை நாட்டி உலகுக்குப் பறையறைந்து வரும் மண், ஈழமண்.

தாமோதரர்:

இம் மண்ணின் வடபால் அமைந்து, என்றும் வண்டமிழ்த் தேன் கொழிக்கும் பெயரும் பெருவாழ்வும் கொண்டிலங்குவது பெரும்பெயர் யாழ்ப்பாணம்.அதன் அணித்தால் அமைந்த புத்தூரை அரவணைத்துள்ள சிற்றூர் சிறுப்பிட்டி. அவ்வூரிலே பிறந்த பெருமகனார் சி.வை. தாமோரனார், பிறந்த நாள் கி.பி.12-9-1832.

பெற்றோர் பெயர் வைரவநாதர் - பெருந்தேவி'.

எண்சீர் அகவல் விருத்தம் ஒன்றிலே தம் முன்னோர் பின்னோர்களை அடக்கிக் கூறுகிறார் தாமோதரர்

சிற்றூர்ப் பகீரதி கோத்திரனாள் வேளாண்

திகழ்மரபோன் மாப்பாண முதலி மேனாள்