உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 21.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் வளர்த்த தாமோதரனார்

பெற்றனன் வேலாயுதனை, அவன்தன் மைந்தன்

.

பேர்மலி அம்பலவாணன், மூத்த தம்பி

உற்றான், அன் னோற்கவன்சேய் குருநா தேந்தல், உதவு வயிரவநாதா சிரியன், தந்த

சொற்றார் தா மோதரனுக், கமிர்த லிங்கன்,

மாப்பாணர்

சுதன் தியாக ராசனவன் தோன்றல் மாதோ!

மகனார் வேலாயுதனார்; அவர்

97

மகனார்

அம்பலவாணர்; அவர் மகனார் மூத்தநம்பி; அவர் மகனார் குருநாதனார், அவர் மகனார் வயிரவநாதனார்; அவர் மகனார் தாமோதரனார்; அவர் மகனார் அமிர்தலிங்கனார்; அவர் மகனார் தியாகராசனார். தியாகராசனார் பிறந்த பூரிப்பில், தாமோதர னாரிடம் பூத்த பாமலர் ஈது.

வைரவநாதர்:

வைரவநாதர் - பெருந்தேவியார் மக்கள் எழுவர். அவருள் தலைமகனார் தாமோதரனார்.

வைரவ நாதர் சிறந்த தமிழ்ப் புலமையர்; தமிழ்ப் புலமைத் தொழிலும் நடாத்தியவர். தாமோதரர் பாடலிலே 'வயிர வநாதாசிரியன்' என்றுள்ள தொழிலிணைப்பு இதனைத் தெளிவிக்கும்.

கல்வி:

தொடக்கக் கல்வியும் வளர்கல்வியும் தந்தையாரிடமே கற்றார் தாமோதரனார். அறநூல்கள், சொற்பொருள் கூறும் நிகண்டு நூல்கள் ஆகியவற்றைக் கற்ற பின்னர், மேனிலை நூல்கள் கற்க விரும்பினார் தாமோதரனார். சிறுப்பிட்டிக்கு அருகிலமைந்த சுன்னாகம் (சுன்னை) முத்துக்குமார நாவலரை அடுத்து இலக்கிய இலக்கணப் புலமை பெற்றார். முத்துக்குமரர் கொடை மாண்பே தாமோரர் தண்டமிழ்த் தொண்டின் வித்தும் விளைவுமாய் அமைந்தது எனலாம். வீரசோழியம், கலித்தொகை, இலக்கண விளக்கம், சூளாமணி, தொல்காப்பியம் ஆகிய பதிப்புகளில் தம் தமிழாசிரிய வணக்கம் தெரிவித்துள்ளார் தாமோரர்.

மேற்கல்வி:

தமிழ்க் கல்வி கற்றுச் சிறந்தபின்னே தாமோதரர்க்கு ஆங்கிலங் கற்கும் அவா உண்டாயிற்று. அதனால் தெல்லியம் பதி அமெரிக்க மிசன் கலாசாலை, வட்டுக் கோட்டைக் கல்வி