உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 21.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் வளர்த்த தாமோதரனார்

107

மருத்துவம் ஆங்கிலமுறை, சித்தமுறை, யுனானி முறை எனப் பார்த்தும் நலமுண்டாக வில்லை. தமக்கு மருத்துவம் செய்து கொள்வதிலும் அக்கறை அற்றார் தாமோதரர்; மருந்துண்பதையும் வெறுத்தார்; மருந்து உட்செல்லுதலும் அரிதாயிற்று. 1900 திசம்பர் 31ஆம் நாள் நலப்படுவதுபோல் தோற்றந் தந்து 1901 சனவரி முதல் நாள் செவ்வாய் காலை 9-3-0 மணிக்குத் தாமோதரர் இயற்கை எய்தினார்.அவர்தம் உடன்பிறந்தார் ஆகிய சி.வை. சின்னப்பாவும், மகனாராகிய அழகு சுந்தரரும் அருகிருக்க, சுற்றமும் நண்பும் சூழ்ந்திருக்கத் தாமோதரர் அமைதியுற்றார். அன்று பிற்பகலில் புரசபாக்கம் சுடுகாட்டில் அவர்தம் உடலம் எரியூட்டப்பட் தமிழ்ப் புலமை சான்ற பெருமக்கள் பலர் புடைசூழ்ந்திருந்து இரங்கலும் கையறு நிலையும் உரைத்தனர். பரிதிமாற் கலைஞர் கையறு நிலை பாடினார். யாழ்ப்பாணம் நா.கதிரைவேலரும் பிறரும் இரங்கல் உரைத்தனர்.

இறுதிமுறி:

து.

தாமோதரனார் ஓர் இறுதிமுறி எழுதி வைத்திருந்தார். அதில் சில திட்டங்கள் ஏற்படுத்தி அவற்றைத் தம் கடைசி மனைவியின் வழிவந்த மக்கள் நிறைவேற்று வரானால் தம் சொத்து முழுவதும் அவர்களிடத்து ஒப்பிக்கப்படவேண்டும் என்றும், அவ்வாறு நிறைவேற்றத் தவறினால் செந்தமிழ் வளர்ச்சியின் பொருட்டு ஈழத்தில் ஒரு கல்லூரி ஏற்படுத்துமாறு அரசினிடம் ஒப்படைத்தல் வேண்டும் என்றும், தம் ஏட்டுப்படிகள் கைப்படிகள்ஆகியவை திருவாலங்காட்டிலுள்ள செந்தமிழ்ப் பரிபாலன மடத்தில் சேர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும், தாம் வழிபட்டு வந்த சிவலிங்கமும் அணிந்திருந்த உருத்திராக்க மாலையும் தம் ஆசிரியரை அடையவேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார். தம் மைந்தர் அழகுசுந்தரம் தக்க அலுவலில் அமர்ந்திருப்பதால் தம் சொத்தில் அவர்க்குப் பங்கு இல்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.

தம் இறுதிமுறியில் தம் சொத்தை அடைவதற்குத் தம் மூன்றாம் மனைவியின் மக்கள் தக்க பருவத்தினராகி, இந்தியப் பல்கலைக்கழகம் ஒன்றில் பி.ஏ. பட்டம் பெற்று, திருமணம் செய்த பின்னர் அடையலாம் என்று வரையப்பட்டிருந்த திட்டமும், தம் நூ ல்கள் ஏலத்தில் விற்கப்பட்டு அதனையும் தம் சொத்தோடு சேர்க்கப்பட வேண்டும் என்று குறிக்கப்பட்டதையும் பெருமை சேர்க்காதவை என்பர்; வாழும் மக்கள் உரிமையைப் பொதுவாக நோக்கி இறுதி முறி எழுதாமை குறை என்றும் சுட்டுவர். இவர் வைத்திருந்த நூல்களைக் கொண்டு ஒரு நூலகமாக்கும் ஏற்பாட்டைச்