உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 21.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106

இளங்குமரனார் தமிழ் வளம் -21

அவர் குமாரர் சிறிதும் இடம் தாராது தாம் அங்கீகரித்த மதத்திலேயே இன்றும் உறுதியாக நிற்கின்றனர் என்பது அது. (பக்.

75-78).

இராவ்பகதூர்:

தாமோதரர் செய்துவந்த தமிழ்த் தொண்டு கல்வித் தொண்டு முறைத்தொண்டு ஆகியவற்றை நன்கறிந்த அரசு அவரைச் சிறப்பிக்கக் கருதி 'இராவ்பகதூர்' (Rao Bahadur) என்னும் மதிப்புறு விருதினை 1895 ஆம் ஆண்டு வழங்கியது. அதனை அறிந்த மைசூர் அரசு தாமோதரரை அழைத்துப் பாராட்டெடுத்துப் பரிசு வழங்கியது. ஆங்கிலப் பெருமக்கள் செல்வர்கள் திருமடத்தலைவர்கள் ஆகியோரெல்லாம் தாமோதரர் பெற்ற சிறப்பினை வரவேற்றுப் பாராட்டினர்.

உடல்நிலை:

புலமையாலும் புகழாலும் பெருகிவந்த தாமோதரனார் உடல்நலக்குறைவாலும் நெருக்குற்றார். அந்நிலையில் ஈழத்திற்குச் சென்று கீரிமலைப்பகுதியில் உறைந்தார். முன்னர் இருமுறை 'அரச பிளவை' என்னும் நோய்க்கு அவர் ஆட்பட்டதுண்டு. எனினும் இம்முறை (1896) ஏற்பட்ட அந்நோயால் இறுதியே நேருமென அவரும் எண்ணினார். உற்றார் உறவினரும் எண்ணிச் சோர்ந்தனர். எனினும் அக் கட்டியும் இக்கட்டு ஏற்படுத்தாமல் தூர்ந்தமை அனைவரையும் மகிழ்வித்தது. உடல்நலம் பெற்றுச் சிறிதுகாலம் யாழ்ப்பாணத்தில் தங்கினார். அக்காலத்தில் அவர்தம் இளைய மகளார் சிவபாக்கியம் என்பார் இயற்கை எய்தினார். பட்டுப்பட்டுப் பழக்கமாகிப் போவதுதானே உள்ளம்! ஒருவாறு தேறி, ஈழத்தில் இருந்து சென்னைக்கு வந்தார் தாமோதரர். அவர்க்கு அமைதியும் நிறைவும் தந்ததாகிய பதிப்புப் பணியைத் தொடர்ந்தார். எட்டுத்தொகையுள் ஒன்றாகிய அகநானூற்றைப் பதிப்பிக்க வேண்டும் எனக் கருதித் தக்க தமிழ்ப்புலமையர் இருவரை ஒருங்கமர்த்திக் கொண்டு ஆய்வு செய்தார். மணிமிடை பவளம் வரையில் ஆய்வு நிகழ்ந்தது. அதனை முற்றுவிக்கு முன்னர்த் தாம் முன்னே பதிப்பித்த சூளாமணியை உரைநடையில் எழுதி வசனசூளாமணி' என்னும் பெயரால் 1898 இல் வெளியிட்டார்.

இயற்கை எய்துதல்:

ஆண்டு 1900 கார்த்திகைத் திங்களில் தாமோதரர் உடல்நிலை மிகச் சீர்கேடாயது. இருமல் பெருகியது. செரிப்புக் குறைந்தது;