உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 21.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் வளர்த்த தாமோதரனார்

105

சரியெனக் கொண்டு அம் மதத்தைத் தழுவினர். ஆகவே, தந்தையாருடன் வசித்தலும் கூடாததாயிற்று:

தாம் சைவரென்றும் சிறந்த தமிழ் வித்துவான் என்றும் பெயர் வகித்தும் தமது குமாரர் கிறிஸ்தவரானது தமக்குப் பெருங்குறைவென்று பிள்ளையவர்கள் நினைந்து மிக வருந்தினர். அவர் குமாரரோ தமக்கு உண்மையான மனப்பாக்கியத்தை அளிக்கவல்ல மெய்ச் சமயத்தைக் கண்டோமென்று மகிழ்ந்தனர். ஆகவே, தகப்பனாரும் புத்திரரும் சிறிது காலம் ஒருவரை ஒருவர் பார்ப்பதும் பேசுவதும் இல்லையாயிற்று. இச் சம்பவத்தைப் பிள்ளையவர்கள் தம் நண்பர் கிலரிடத்துத் தமது கண்களினின்று நீர் பெருக எடுத்துக் கூறியும் இருக்கின்றனர்.

நம் இந்துக்கள் தம்முள் ஒருவர் எவ்விதத் துன்மார்க் கராயினும் அவரைத் தம் கூட்டத்தினின்றும் நீக்கிவிடார். கொலை களவு கள் காமம் முதலிய கொடிய பாதகங்களைச் செய்தவரும் அவை நிகழ்ந்த காலத்துச் சிறிது அவமதிக்கப் பெறினும் சாதியை விட்டு நீக்கப் பெறார். ஆயின் ஒருவன் கிறிஸ்தவ னாயினான் எனின், உடனே அவனைப் பகைப்பர். வித்துவ சிரோமணியாகிய பிள்ளையவர்களும் தம் குமாரர் கிறிஸ்தவரானதன் நிமித்தம் அவரைப் புறக்கணித்தது அவர் மாட்டு என்றும் நீங்காதவோர் களங்கமேயாம். ஏனெனில் அவர் குமாரர் உண்மையான விசுவாசத்தோடும் மெய்ப்பத்தியோடுமே கிறிஸ்தவ மதத்தைத் தழுவினார் என்பதும் அவ்வாறு தழுவிய பின்னர் அவரிடத்து அநேக நன் மாறுதல்கள் காணப்பட்டிருக் கின்றன என்பதும் அவர் தாம் புதிதாய் அங்கீரித்த மதத்தில் உறுதியாய் இருக்கின்றனர் என்பதும் அவர் ஜீவியத்திலிருந்து நன்கு விளங்குகின்றன.

கிறிஸ்தவரான பின்பு அவரிடத்து அநேக விசேட நற்குணங்கள் காணப்படுவதாகப் பிள்ளை அவர்களும் வெளி யிட்டிருக்கின்றனர். தம் குமாரருக்கு ஒரு முறை கடிதம் எழுதிய போது அக்குமாரர் மெய்யான பத்தியினாற்றான் கிறிஸ்தவ மதத்தைச் சார்ந்தனர் என்பதைத் தாம் அப்பொழுது தான் கண்டதாகவும், தம் மனசாட்சியைத் திருப்திப்படுத்தும் பொருட்டு அவ்வாறு செய்த தம் புத்திரரோடு தமக்கு அச்செய்கையளவில் யாதும் விரோதம் இல்லை என்றும், சைவ சமயத்துண்மைகளைக் கற்றறியாது அதை நீத்ததே தமக்குப் பெருவிசனம் என்றும், செய்ய வேண்டிய பிராயச்சித்தங்களைச் செய்து திரும்பியும் சைவ சமயத்தை அனுசரித்தால் தாம் அவரை ஏற்றுக்கொள்ளத் தடை யில்லை என்றும் கூறியிருக்கின்றனர். இவ்விதக் கேள்விகளுக்கு