உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 21.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104

இளங்குமரனார் தமிழ் வளம் - 21

ஆயினும், இக் குமாரர்பிரவேச பரீட்சை கடந்து எப்.ஏ. வகுப்பில் கல்வி கற்கும் காலத்து, அவருடைய மனத்தின்கண் மதவிஷயமாகச் சில சந்தேகங்கள் நிகழ்ந்தன. ஆயினும் அவர் அதை வெளியில் காட்டாது வழக்கப் பிரகாரம் தமது கடமை களைச் செவ்வனே செலுத்திவந்தார். ஆயினும் நாளடைவில் அம்மத சந்தேகங்கள் வளர்ந்துகொண்டே வந்தமையால் அவர் விபூதி தரித்தல், சந்தியாவந்தனம் பண்ணுதல் முதலிய வற்றை நிறுத்திவிட்டனர். இச்சமயத்தில் தமது தாயாருடைய திதி வந்தது. இவரே திதியின் அன்று நடக்க வேண்டிய சடங்குகள் யாவையும் செய்ய வேண்டியவராகலின் பிள்ளையவர்களும் தம் குமாரர் வழக்கப் பிரகாரம் செய்யவேண்டியவற்றைச் செய்து முடிப்பர் என்று எதிர் பார்த்திருந்தார். ஆயின் குமாரரோ தாம் வீட்டில் அன்று தங்கினால் தமக்குச் சம்மதமில்லாத சிரார்த்தச் சடங்குகளைச் செய்ய நேரிடுமென்று நினைந்து, அன்றைத் தினத்தில் அதிகாலையில் எழுந்து தம் தந்தையார் அனுமதியின்றி வெளிப்போந்தனர்.

பிள்யைவர்கள் புரோகிதர் வந்தவுடன் குமாரரைத் தேடியும் காணாது தாமே அச் சடங்கை நிறைவேற்றினர். அதன்பின்னர்ப் பிள்ளையவர்கள் தம்குமாரரிடத்திருந்து ஓர் கடிதம் பெற்றனர். அக்கடிதத்தில் தாம் வீட்டை விட்டு அன்றைத் தினத்தில் வெளிப்போந்ததற்குக் காரணம் இன்ன தென்றும், தமக்குச் சைவசமயம் திருப்தியைத் தரவில்லை என்றும், அது காரணமாகத் தாம் கிறிஸ்தவ மதப்பிரவேசஞ் செய்ய நிச்சயித்திருப்பதாகவும், அவ்வாறு செய்யத் தந்தையார் அனுமதி தரல் வேண்டுமென்றும், அவ்வண்ணம் கிறிஸ்தவ மதத்தைச் சார்ந்த பின்னர் தந்தையாருக்கு யாதும் தடையிராத பட்சத்தில் அவரோடு தாம் வசிப்பதற்குச் சித்தமாய் இருப்பதாகவும் குமாரர் தெரிவித்தனர்.

பிள்ளையவர்கள் இக்கடிதத்தைப் பார்வையிட்டு மிக வருந் னராயினும் கிறிஸ்தவமதப் பிரவேசஞ் செய்த பின்னர்த் தம்மோடு கூடத் தம் குமாரர் வசித்தல் தகாதென்று மறுத்தது மன்றிக் குமாரர் கருதியவாறு அம்மதப் பிரவேசஞ் செய்வதற்கு அனுமதியும் அளித்திலர். அதுவுமன்றித் தம் புதல்வர் இவ்விதமாகக் கிறிஸ்தவ மதத்தில் பிரவேசிப்பதற்கு யாதானுமோர் முக்கிய நியாயமிருத்தல் ண்ேடுமென்றும், அது இன்னதென உணர்ந்து; அறிந்து பரிகரித்து அவரை அவ்வாறு செய்யாது தடுப்பது தமது கடமை என்றும் கொண்டு, அதற்கு வேண்டிய பிரயத்தனங்கள் யாவும் செய்தார். ஆயினும், அழகு சுந்தரம் தாம் கொண்டதே