உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 21.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் வளர்த்த தாமோதரனார்

103

பின்னே, சிங்கார வேல், வெற்றிவேல் என மக்கள் இருவரும் அவர்வழியே தோன்றினர். 1890-இல் தாமோதரர் தம் குடும்பத்துடன் மீளவும் சென்னைக்குச் சென்றார். புரச பாக்கத்தில் குடியமர்த்திக் கொண்டார்.

சிறப்புகள்:

சென்னை சேர்ந்த பின்னர்த் தொல்காப்பிய எழுத்ததி காரத்தை நச்சினார்க்கினியர் உரையுடன் வெளியிட விரும்பிச் சுவடிகளை ஆய்ந்தார். கல்வி வழியாலும், பதிப்பு வழியாலும், பதவி வழியாலும் நன்கு அறியப்பட்டிருந்த தாமோதரர், பல்கலைக் கழகப் பாடநூற்குழு, பதிப்புக்குழு, சட்டக்குழு, தேர்வுக்குழு, ஆட்சிக்குழு ஆகியவற்றில் உறுப்பாண்மை பெற்றுத் திகழ்ந்தார். தமிழ்ப்பாடத் தேர்வுக் குழுவின் தலைவராகவும் விளங்கினார். தொல்காப்பிய எழுத்ததிகாரம் 1891 வெளிவந்தது.அதற்குப் பொருள் உதவி புரிந்தவர் புதுக்கோட்டை அரசின் முறைமன்ற நடுவருள் ஒருவராக விளங்கிய அண்ணாமலை என்பார். 1893-ஆம் ஆண்டில் தாமோதரர் குடும்பத்தில் நிகழ்ந்த நிகழ்ச்சி ஒன்று பற்றி 1934-ஆம் ஆண்டு வெளிவந்ததும், இராசரத்தினம் என்பார் எழுதியதும் ஆகிய தாமோதரம் பிள்ளை அவர்கள் சரித்திரம் (The Life of Rao Bahadur C.W. Thamotharam Pillai, in Tamil) என்னும் நூல் கூறுமாறு:

மகனார் நிலை :

-

இல்

"1893-ஆம் வருடத்திற் பிள்ளையவர்களுக்கு அதிக வியாகுலத்தைத் தந்த பிறிதோர் சம்பவம் அவர் குடும்பத்து நிகழ்ந்தது. அவருக்குப் புத்திர சிகாமணிகளாக வுதித்தோர் யாவரும் இறந்துவிட சி. தா. அழகு சுந்தரம் என்னும் ஒருவரே எஞ்சி நின்றனர். ஆகவே, பிள்ளையவர்களும் அக்குமாரரிடத்து மிக்க அன்பு பாராட்டி வந்தனர்.

பிள்ளையவர்கள் சிவபெருமானே முழுமுதற் கடவுளென்று துணியும் சைவராகலின் அப்பெருமான் திருவடிகளையடைதற் குரிய மார்க்கமாகிய சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னும் நான்கினுள் முதலிரண்டினாலும், அப்பெருமானை வழிபட்டுச் சமயதீட்சை, விசேட தீட்சை என்னும் இரண்டும் பெற்றுச் சிவலிங்கம் எழுந்தருளச் செய்து பூசித்து வந்தனர். ஆகவே, அவர் குமாரரும் சிறுவயது முதல் சைவ சமயத்தில் மிக்க பற்றுடையவராகிச் சமயதீட்சை பெற்றுச் சிவபெருமானையே பூசித்து வந்தனர்.