உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 21.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102

இளங்குமரனார் தமிழ் வளம் - 21

என்பது இவண் அறியத்தக்க செய்தியாம். அந்நாளில் அத்திரு மடத்துத் தலைவராக இருந்தவர் தவத்திரு சுப்பிரமணிய தேசிகர் என்பார். கலித்தொகைச் சுவடிகள் வழங்கிப் பதிப்பிக்கத் தூ ண்டியவர் அவரே. அதற்குப் பொருளுதவி புரிந்தவர் புதுக்கோட்டை அரசின் அமைச்சராக விளங்கிய சேசையா ஆவர். கலித்தொகைப்பதிப்பு 1887 இல் வெளிவந்தது.

நடுவர்:

பேரன்பும் பெருந்தன்மையும் கொண்ட அமைச்சர் சேசையா தாமோதரர் தொடர்பு, நூல்வெளியீட்டு அளவில் நிற்கவில்லை. தாமோதரர் புதுக்கோட்டை அரசின் முறைமன்ற நடுவர்களில் ஒருவராகவும் அமர உதவிற்று. அதனால் 1887 முதல் தாமோதரர் புதுக்கோட்டை வாழ்வினரானார்.

பதிப்பு:

ஒருகாலத்தில் இலக்கண விளக்க நூலுக்கு மாறாக இருந்த திருவாவடுதுறைத் திருமடம், தாமோதரர் எடுத்துக் கொண்ட நன் முயற்சியால் சுவடிதந்து வழக்கம் போல் உதவியது. சமணம் சார்ந்த நூலாகிய சூளாமணி வெளியிடவும் தூண்டி உதவியது. தாமோதரர் செயல் திறமும் எடுத்துரைக்கும் பாங்கும் இவ்வாறு எய்தா நலங்களும் எய்தச் செய்தன. இலக்கண விளக்கம் போடி குறுநிலமன்னர் திருமலை போடய காமராச பாண்டியர் உதவியால் 1889-இல் வெளிவந்தது. சூளாமணி தாமோதரரின் இளவல், சி.வை. ளைய தம்பியும் அவர் நண்பர்களும் புரிந்த உதவியால் அதே ஆண்டில் வெளிவந்தது.

ல்

இன்பும் துன்பும் :

சூளாமணி வெளிவந்த இன்பியல் ஒருபால். அதே ஆண்டில், தம் தலைமகனார் சி.வை. நல்லதம்பி தம் இருபத்தாறாம் அகவையில் இளமனைவியையும் இரு மக்களையும் விடுத்து இயற்கை எய்திய துன்பியல் ஒருபால். அந்நிலையில் 1890-இல் தாம் ஏற்றிருந்த முறைநடுவர் பொறுப்பைத் தாம் உடன்பட்டிருந்த கால எல்லை வந்த அளவில் விடுத்து யாழ்ப்பாணம் சென்று சில காலம் தங்கினார்.

நல்லதம்பி மறைவால் குடும்பத்தில் அவலம் சூழ்ந்தது. அடுத்த மகனார் சி.தா. அழகு சுந்தரம் இளைஞர். தாமோ 1882-ஆம் ஆண்டே தம் இரண்டாம் துணைவியையும் இழந்துவிட்ட தமியர். இந்நிலையில் குடும்பச் சூழல் கருதி மூன்றாம் மணமும் புரிந்தார்.