உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 21.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் வளர்த்த தாமோதரனார்

101

அப்போது, பல்கலைக் கழகம் நடாத்திய சட்டத்துறைத் தேர்விலும் பட்டம் பெற வேண்டும் என்னும் ஆர்வம் தாமோதரர்க்கு உண்டாயிற்று. அதனால் அப்படிப்பில் தலைப்பட்டு 1871-ஆம் ஆண்டு சட்டத் தேர்வு எழுதித் தேர்ச்சி யுற்றார்.1882-ஆம் ஆண்டு தாமோதரர்க்கு ஐம்பதாம் அகவை. அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்று,உதவித்தொகை பெறுவாராயினார். ஆனால், ஓய்வு ஓய்வாயிற்றா? ஓய்வுக்கு ஓய்வு தந்து, உழைப்பின் வடிவாக தொண்டின் உறைவாகத் - தாமோதரர் தண்டமிழ்த் தொண்டிலே புகுந்தார்.

பதிப்பு:

ஓய்வு பெறுவதற்கு முதல் ஆண்டிலே (1881) வீரசோழியம் வெளியிட்டார். ஓய்வு பெற்ற மறு ஆண்டிலேயே (1883) திருத்தணிகைப் புராணம், இறையனார் அகப்பொருள் என்னும் நூல்களைச் சுவடிகளை ஆய்ந்து அச்சிட்டு வெளியிட்டார். சென்னைப் பகுதியினும் தென்னிலப் பகுதிகளே ஏடு தொகுத்தற்கு ஏற்றவையாக இருத்தலை எண்ணித் தம் இருப்பிடத்தைக் குடந்தைக்கு (கும்பகோணத்திற்கு) மாற்றிக் கொண்டார். ஆங்குக் குடியிருப்புக் கொண்ட இடம் கருப்பூர். ஆண்டு 1884. தாம் பெற்றுள்ள சட்டத் துறைத் தேர்ச்சி எவ்விடத்திற்கும் பயன்படுவ தாயிற்றே. அதனால் குடந்தையில் வழக்கறிஞர் தொழிலும் நடாத்தினார் தாமோதரர். அத்துறை வழியாக வரும் வருவாய் அனைத்தும் தமிழ்நூல் பதிப்புக்கே பயன்படுத்தும் குறிக்கோளைக் கொண்டு உழைத்தார். 1885 ஆகிய அவ்வாண்டிலேயே தொல்காப்பியப் பொருளதிகாரத்தை உரையுடன் வெளியிட்டார். அதனால் அவர்க்கு உருபா 3500 செலவாயிற்று. ஆனால்,நூல் விற்பனையாலும் நன்கொடை வகையாலும் செலவில் மூன்றில் ஒரு பகுதிதானும் கிட்டவில்லை. அந்நிலையை விரித்தெழுதி 1886 சூலை 15-இல் ஓர் அறிக்கை விடுத்தார். இந்து இதழிலும் எழுதினார். இவ்வறிக்கைகள் வருதற்கு முன்னரே, இவர்தம் இழப்பினை அறிந்துகொண்டு உதவிய பெருமக்கள் இருவர். ஒருவர், சென்னை மாநிலக் கல்லூரிக் கணக்கியல் பேராசிரியராகத் திகழ்ந்தவரும் தமிழ்ப் புலமையில் தலைநின்றவருமாகிய பூண்டி அரங்கநாதர். மற்றொருவர் மைசூர் உயர்முறைமன்ற நடுவராக விளங்கிய வராகிய பெருமை தரு அ. இராமச்சந்திரர். அறிக்கை கண்ட பின்னர் அவ்விழப்பை ஈடுசெய்யும் அளவில் பலர் உதவினர். அவர்க்கெல்லாம் நன்றியுரைத்தார். ஏடு வழியாகவும், உதவி வழியாகவும் பேருதவி செய்த திருமடம் திருவாவடு துறை

www