உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 21.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100

இளங்குமரனார் தமிழ் வளம் - 21

தாமோதரனார் குடிக்குத் தலைமகனாகப் பிறந்து தந்தையெனக் குடிதாங்கிய தகவினை,

க்

"தந்தையெமை இளவயதில் தணந்திடநீ அன்றுமுதல்

வந்தபல இடரகற்றி வாழ்வெமக்கீண் டளித்துவந்து

தந்தை யாகி

வந்தாய் உன்றன்

சிந்தைமிக நொந்திடயாம் செய்தபிழை பலவெனினும்

சிந்தி யாது

முந்தையினும் அருள்சுரந்த முன்னவனே இனிஎன்றுன்

முகம்காண் போமே'

என இவர் இயற்கை எய்திய போது இவர் இளவல் சி.வை. சின்னப்பர் பாடிய இரங்கல் பாடலால் அறியலாம். இவர்க்குத் தமிழ் கற்பித்த ஆசிரியரும் தாமோதரரே என்பதும் குறிப்பிடத் தக்கதாம்.

குடும்பக் கடமைகளை இளந்தைப் பருவந் தொட்டே இனிது செய்துவந்த தாமோதரர் தாம் மேற்கொண்ட பணிக் கடமைகளையும், பாராட்டுமாறு செய்தார். இவ்விரண்டன் இ டையேயும் இடையறவு இல்லாமல் இறுதிக்காலம் வரை செய்து வந்த தமிழ்த் தொண்டு ஈடு இணையற்றதாகும். அத் தொண்டே தமிழ்வாழுங் காலத்தளவும் வாழும் நிலைபெற்ற புகழை அவர்க்கு வழங்கிற்று. அதனை மேலே காண்போம்.

கணக்குத் துறை :

சென்னை வரவு செலவு கணக்குத் துறையில் இவர் பணியாற்றிவந்தபோது ஒருநாள் அவ்வலுவலகத்தலைவர் விரைந்து முடிக்க வேண்டிய ஒரு கணக்கைத் தாமோதரரே தக்கவரெனத் தேர்ந்து அவரிடம் ஒப்படைத்தார். அப்போது, 'இதனை யானே முடிப்பதாயின் ஒரு கிழமை (7 நாள்) ஆகும். நீர் பத்து நாள்களில் முடித்துத் தருவீரென நம்புகிறேன்' என்றார். 'அவ்வாறே ஆகுக' எனப் பணியை ஏற்றுக் கொண்ட தாமோதரர், நான்கே நாள்களில் முடித்துத் தந்தார். அதனைக் கண்ட அவ்வாங்கிலத் தலைமகனார் "நீவிரென்ன இவ்வேலையை நும் இரு கைகளாலும் செய்து முடித்தீரோ” என வியந்து பாராட்டினார். அப் பாராட்டும் நல்லெண்ணமும் தாமோதரர் உள்ளம், உழைப்பு, உயர்வு ஆகியவை போலவே பதவியுயர்வும் வழங்கின. அவ்வலுவலக ஆய்வுத் தலைமையையும் அது வழங்கிற்று.