உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 21.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் வளர்த்த தாமோதரனார்

115

தாமோ: அவர் என்ன உபகாரம் செய்வார்? பணம் வேண்டு மானால் சிறிது கொடுப்பார். புரூப் பார்ப்பாரா? பதிப்புக்கு வேண்டிய அமைப்புக் களைச் சொல்லித் தருவாரா? நீங்கள் முன்னமே பதிப்பித்த கும்பகோண புராணம் போன்றதன்று இந்த நூல். இதைப் பதிப்பிக்க வேண்டிய முறையே வேறு. சென்னைக்கே போய் அங்கே நேரில் இருந்து காரியத்தை முடிக்க வேண்டும். அங்குள்ள ஸ்காட்டிஷ் அச்சுக் கூடத்தலைவர் எனக்கு மிக வேண்டியவர். நான் எது சொன்னாலும் நிறை வேற்றித் தருவார். இந்த விஷயத்தில் காலேஜ் வேலை வேறு உங்களுக்கு ஒரு தடையாக இருக்கும்.

நான் : காலேஜ் வேலை எனக்கு ஒரு தடையாயிராது. ஒழிந்த நேரத்தில் தானே நான் இந்த வேலையைக் கவனிப்பேன். அவசியமானால் லீவு வாங்கிக் கொள்ளுகிறேன். நான் எழுத்தெழுத்தாக ஆராய்ந்து வைத்திருக்கும் நூலை உங்களிடம் விடுவதானால் என் உழைப்பு வீணாக வன்றோ போய்விடும்?

தாமோ : ஏன் வீணாகும்? அவ்வளவும் நன்றாக உபயோகப் படுமே! நீங்கள் ஆராய்ந்து கண்ட விஷயங்களை என் பதிப்பில் சேர்த்துக்கொள்ளுகிறேன். உங்கள் பெயரை யும் வெளிப்படுத்துகிறேன். நீங்கள் பதிப்பிப்பதாக இருந்தால் உங்கள் உழைப்பைப் பற்றி நீங்களே பாராட்டிக் கொள்ள முடியாது. நான் பதிப்பித்தால் உங்களைச் சிறப்பித்து நன்றாக எழுதுவேன்.

நான்

எனக்குப் புகழ் வேண்டும் என்றும், பிறர் என்னைப் பாராட்ட வேண்டும் என்றும் நான் எதிர்பார்க்க வில்லை. நான் பதிப்பிப்பதாகச் செய்து கொண்ட சங்கற்பமும் அதன் பொருட்டு மேற்கொண்ட சிரமங்களும் வீணாகி விடுமே என்று யோசிக்கிறேன்.

தாமோ: இது வரையில் நீங்கள் பட்ட சிரமம் பெரிதன்று. இதைப் பதிப்பிப்பதிலே தான் உண்மையான சிரமம் இருக்கிறது. அந்தச் சிரமம் உங்களுக்கு ஏற்பட வேண்டாமே என்று தான் சொல்லுகிறேன். நான் அந்தத் துறையில் உழைக்க வேண்டும் என்று தீர்மானித்துச் சில நூல்களை வெளியிட்டிருக்கிறேன். ஆகையால், என்னைத் தமிழுலகு நன்றாக அறியும். சிந்தாமணி என்பதிப்பாக வெளிவந்தால் அதற்கு ஏற்படும்