உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 21.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114

இளங்குமரனார் தமிழ் வளம் - 21

என்றும், அவர்களிடமிருந்து பல திருத்தமான பாடங்கள் தெரிய வந்தன என்றும், தாமோதரம் பிள்ளையிடம் சொன்னேன். அன்றியும் மடத்திலுள்ள பிரதிகளை வைத்துக் கொண்டு இராமாயணம் முழுவதும் சோதித்து நல்ல பாடங்களைக் கைப்பிரதியில் குறித்துக் கொண்ட செய்தியையும் தெரிவித்தேன். பின்பு அவர் என்னிடமுள்ள கம்பராமாயணப் பிரதியை ஒவ்வொரு காண்டமாக வாங்கி நான் செய்திருந்த திருத்தங்களை யெல்லாம் தம் பிரதியில் செய்துகொண்டு என் பிரதியை என்னிடம் திருப்பிக் கொடுத்துவிட்டார்.

ஒருநாள் பிற்பகலில் தாமோதரம் பிள்ளை என் வீட்டுக்கு வந்தார். நெடுநேரம் பேசிக்கொண்டு இருந்தபின்பு, தங்களிடம் சிந்தாமணி விசேஷ உரையுள்ள பிரதியொன்று இருக்கிறதென்றும், அது நல்ல பிரதி என்றும் சென்னையில் நாவலர் பதிப்பு நூல்களை மீட்டும் பதிப்பித்து வந்த சதாசிவ பிள்ளை சொன்னார். சிந்தாமணியைப் பதிப்பிக்கலாம் என்று நான் எண்ணியிருக்கிறேன். கொழும்பில் இருக்கும் பெரிய பிரபுவாகிய கனம் இராமநாதன் வர்கள் அதன் பதிப்புக்கு வேண்டிய செலவு முழுவதையும் தாம் கொடுப்பதாக எனக்கு வாக்களித்திருக்கிறார். தங்கள் பிரதியைக் கொடுத்தால் என்னிடமுள்ள பிரதியோடு ஒப்பிட்டுக்கொண்டு பதிப்பிப்பேன் என்றார்.

மிகவும் சிரமப்பட்டுப் பல வருஷங்களாகச் சோதித்து வைத்திருக்கிறேன். நானே அதனை அச்சிட எண்ணியிருக்கிறேன். ஆதலால் கொடுக்க மனம் வரவில்லை என்று சொல்லி நான் மறுத்தேன்.

தாமோ : இந்த விஷயத்தில் நான் மிக்க அனுபவமுள்ளவன். சீவக

நான்

சிந்தாமணியைப் பதிப்பிக்க முதலில் அதிகப் பணம் வேண்டும்.சென்னைப் பட்டணத்தில் அச்சிட வேண்டும். நீங்கள் இங்கே இருந்து கொண்டு சென்னையில் அச்சிடுவதென்றால் எளிதில் முடியாது. நான் தொடங்கி னேனானால் இன்னும் மூன்று நான்கு மாதங்களுள் புத்தகத்தை நிறைவேற்றிவிடுவேன். உங்கள் கையில் பொங்கலுக்குள் முந்நூறு பிரதிகள் தருவேன்.

இதற்கு முன்பு சென்னையில் கும்பகோணபுராணம் முதலிய சில நூல்களை அச்சிட்டதுண்டு. சேலம் இராமசுவாமி முதலியார் வேண்டிய உபகாரங்களைச் செய்வதாக வாக்களித் திருக்கிறார்.