உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 21.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் வளர்த்த தாமோதரனார்

113

ஆராய்வாரும் படிப்பாரும் இல்லாமல் பிற்கால நூல்களையே படிப்பவர்கள் மலிந்த தமிழ்நாட்டில் எனக்குத் துணை செய்வார் ஒருவரும் இல்லை, நானோ அந்த ஆராய்ச்சியில் நூதனமாகப் புகுந்தவன். ஆனாலும் எப்படியாவது விஷயத்தைத் தெரிந்து கொள்ளவேண்டும் என்ற ஆவல் மாத்திரம் மட்டுக்கு மிஞ்சி இருந்தது. இந்த நிலையில் பழங்காலத்துத் தமிழ் நூல்களை அச்சிடும் விஷயத்தில் ஊக்கமுள்ள ஒருவர் கும்பகோணத்துக்கு வரப்போகிறார் என்று அறிந்தவுடன் எனக்கு மகிழ்ச்சி உண்டாயிற்று. - என் சரித்திரம். 757760.

சென்னையில் இருந்த சி.வை. தாமோதரம் பிள்ளை எனக்கு எழுதிய படியே கும்பகோணத்தை அடைந்து அங்கே வக்கீலாக இருந்து வந்தார். அவர் முன்னமே ஒரு பெரிய உத்தியோகத்தில் இருந்து பென்ஷன் பெற்றவர். அவர் அடிக்கடி என் வீட்டுக்கு வந்து தமிழ் நூல்கள் விஷயமாகச் சல்லாபம் செய்து பழகலானார். கும்பகோணத்துக்கு அருகேயுள்ள கருப்பூரில் ஜாகை வைத்துக் கொண்டிருந்தார். அவர்வீட்டுக்கு நானும் அடிக்கடி போய் வருவதுண்டு. தாம் பல தமிழ் நூல்களைப் பதிப்பிக்க எண்ணியிருப்பதாகத் தெரிவித்ததோடு திருவாவடுதுறை சென்று ஸ்ரீசுப்பிரமணிய தேசிகரைத் தரிசிக்க வேண்டுமென்று விரும்பினார். அங்ஙனமே நான் அவரை அழைத்துச் சென்று தேசிகருக்குப் பழக்கம் செய்வித்தேன். மடத்தில் பல ஏட்டுச் சுவடிகள் இருக்கு மென்றும் அவற்றைத் தம்முடைய பதிப்புக்கு உபயோகித்துக் கொள்ளலாமென்றும் அவர் கருதினார். தேசிகருடன் செய்த சம்பாஷணையில் இருந்து அவருடைய கல்வியறிவையும் பெருந்தன்மையையும் உணர்ந்து கொண்டார்.

கும்பகோணத்திலுள்ள கனவான்களையும் வக்கீல் களையும் தாமோதரம் பிள்ளைக்கு அவர் விரும்பியவாறு பழக்கம் செய்வித்தேன். நாங்கள் இருவரும் அடிக்கடி தமிழ் சம்பந்தமான விஷயங்களைப் பேசுவோம். அவர் பல விஷயங்களைக் கேட்பார், நான் சொல்லுவேன். யாழ்ப்பாணத்திலுள்ள பல வித்துவான் களுடைய செய்திகள் அவர் மூலமாகத் தெரியவந்தன. அவருடன் ஆராய்ச்சிக்கு உதவியாக, யாழ்ப்பாணம் நல்லூர் சிற். கைலாசபிள்ளை என்ற ஒருவர் இருந்தார். அவர் நல்ல அறிவாளியாகத் தோன்றினார். என்பால் மிக்க அன்புடன் அவர் பழகினார்.

ஒருநாள் சம்பாஷணையில் ஸ்ரீமீனாட்சி சுந்தரம்

பிள்ளையவர்கள் கம்பராமாயணத்தில் மிக்க விருப்பமுடையவர்கள்