உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 21.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112

இளங்குமரனார் தமிழ் வளம் - 21

அடியேன் யேன் இன்னும் சின்னாளிற் கும்பகோணம் வரும் போது தங்கள் சிநேகத்தைச் சம்பாதித்தற்கு யாரிடம் ஓர் கடிதம் பெற்று வருவேன் என்று சிந்தித்துக் கொண்டிருக்கத் தேடிய தெய்வம் தானே வந்து கைப்பற்றியதென்னத் தாங்களே எனக்குக் கடிதம் எழுதியதனை நினைக்க நினைக்கப் பேரானந்தத்தை விளைக்கின்றது. தாங்கள் எழுதியருளிய கடிதம் வந்து மூன்றாம் நாள் ஸ்ரீ பெரிய சந்நிதானம் கட்டளையிட்டு அருளிய இறையனாரகப் பொருட்பிரதியும் தபால் மார்க்கமாக வந்து சேர்ந்து 59 ஆவது சூத்திர உரையின் கடைசிப்பாகமும் கண்டு மகிழ்வுற்றேன்.

திருத்தணிகைப் புராணத்தின் முதலிலே ஸ்ரீல ஸ்ரீ கச்சியப்ப சுவாமிகளது சரித்திரத்தைச் சுருக்கமாய் அச்சிட விரும்புகின்றேன். ஆதலால், தாங்களாவது ஸ்ரீமத் இராமசாமி பிள்ளையாவது அச்சரித்திரத்தை விரைவில் எழுதியனுப்பினால் அடியேன் மிக்க நன்றியறிவுள்ளவனாயிருப்பேன். யார் அதனை எழுதியனுப்பினும் இன்னாரால் எழுதப்பட்டதென்பதை அதிற்குறித்துக் காட்ட அடியேனுக்கு உத்தரவும் கொடுக்க வேண்டியது. மேலுள்ளன வெல்லாம் தங்கள் சமூகத்தில் நேரே தெரிவித்துக் கொள்வேன்.

பங்குனி மதியில் உற்பத்தியான தங்கள் சினேகம் பற்குனன் போலச் சீர்பெருகுவதாக.

சென்னபட்டணம், பங்குனி 18

25-3-1883

இங்ஙனம் தங்கள் ஊழியன் சி.வை.தாமோதரம்பிள்ளை.

இறையனாரகப் பொருளும் தணிகைப் புராணமும் நிறைவேறியவுடன் தாமோதரம்பிள்ளை திருவாவடு துறை

த்துக்கும் எனக்கும் பிரதிகள் அனுப்பினார். தணிகைப் புராணக் குறிப்புக்களை இராமசாமி பிள்ளை யிடமிருந்து பெற்றுக்கொண்டும் அவர் என்ன காரணத்தாலோ பதிப்பிக்க வில்லை. 'பிள்ளையவர்கள் சொன்ன அருமையான குறிப்புக்களை இவர் இலக்ஷியம் செய்ய வில்லையே. நல்ல பொருள் கிடைத்த தென்று மிக்க மகிழ்ச்சியோடு உபயோகப்படுத்திக் கொள்ளத் தெரியவில்லையே' என்று நான் எண்ணினேன். சுப்பிரமணிய தேசிகரும் அதே கருத்தை உடையவராக இருந்தார்.

தாமோதரம் பிள்ளை கும்ப கோணத்திற்கே வந்து வசிக்கப் போகிறார் என்பது தெரிந்து எனக்கு ஓர் ஆறுதல் உண்டாயிற்று. சேலம் இராமசாமி முதலியார் கூறியபடி பழைய நூல்களை