உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 21.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் வளர்த்த தாமோதரனார்

117

ட்ட

கண்களுக்கு ஒரு சிறிய கோடாகத் தோன்றலாம். ஆனால் அந்தக் கோட்டின் சந்தேகத்தால் நமக்குத் தோன்றும் விஷயங்கள் வேறு. அந்தக் குறிப்புக்களை இவர் எப்படி உணரமுடியும்? நாம் இப் ஒவ்வோர் அடையாளமும் எவ்வளவு விஷயங்களை உள்ளடக்கியது? அவற்றை மற்றவர் எப்படித் தெரிந்துகொள்ள முடியும்? எவ்வளவு ஜைன நூல்கள் படித்து விஷயங்கள் தெரிந்துகொண்டோம்! எவ்வளவு ஜைனர்களிடம் சென்று சமயமறிந்து நயந்தும் பயந்தும் கெஞ்சியும் சந்தேகங்களைத் தெளிந்து கொண்டோம்! எல்லா வற்றையும் வீணாக்கி விடுவதா? என்று இவ்வாறு சிறிது நேரம் அவரோடு ஒன்றும் பேசாமல் சிந்தனை செய்தேன்.

அவர் மீட்டும் மீட்டும் பல விஷயங்களைச் சொல்லி என் சிந்தாமணிப் பிரதியை விரும்பினார். அப்போது நான் என் தந்தையாரவர்கள் வெளியே போயிருக்கிறார்கள். அவர்கள் வந்த பின்பு கேட்டுக்கொண்டு நாளைக் காலையில் தங்களிடம் வந்து பதிப்பு விஷயத்தைப் பற்றி என் கருத்தைத் தெரிவிக்கிறேன் என்று சொன்னேன்; அவர், அப்படியே செய்யுங்கள்; இப்போது புஸ்தகத்தைக் கொடுங்கள். நான் ஒருமுறை பார்த்து வைக்கிறேன்; பிறகு உங்கள் தீர்மானப்படியே செய்யலாம். பெரும்பாலும் எனக்கு அனுகூலமாகவே முடியுமென்று எதிர்பார்க்கிறேன் என்று கேட்டுக் கொண்டார்.

உள்ளே சென்றேன். நான் ஆய்ந்து திருத்தி இரண்டு பாகங்களாக எழுதிவைத்திருந்த சிந்தாமணிக் கையெழுத்துப் பிரதியை எடுத்து வந்து அவர் கையில் கொடுத்தேன். உடனே, அவர் முகத்தில் ஒரு பிரகாசம் உண்டாயிற்று. அவர் செய்த புன்முறுவலிலே சந்தோஷம் பொங்கியது, சரி, நான் போய் வருகிறேன். நான் சொன்னவற்றையும் என் வேண்டுகோளையும் தங்கள் தந்தையார் அவர்களிடம் தெரிவித்து நாளைக் காலையில் வந்து தங்கள் சம்மதத்தைத் தரவேண்டும் என்று சொல்லி என்னிடம் விடைபெற்றுப் புஸ்தகத்துடன் தம் வண்டியிலேறித் தம் வீட்டுக்குச் சென்றார்.

அது வரையில் சாவதானமாகப் பேசிக்கொண்டு இருந்த தாமோதரம் பிள்ளை புஸ்தகம் கைக்கு வந்தவுடன் திடீரென்று புறப்பட்டது.என் மனத்தில் ஒரு புதிய உணர்ச்சியை உண்டாக்கிற்று. பின்னும் சிறிதுநேரம் அவர் பேசியிருந்தால் ஒருகால் அந்த உணர்ச்சி உண்டாகியிருக்குமோ இராதோ அறியேன். அவர் போனபின் எனக்கு ஒரு மயக்கம் உண்டாயிற்று; ஒன்றிலும் புத்தி செல்லவில்லை; அவர்கைக்குச் சென்ற பிரதி மீட்டும் வருமோ