உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 21.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118

இளங்குமரனார் தமிழ் வளம் - 21

வென்று எண்ணிக் கலங்கினேன். வெகுநேரம் வரையில் பல வகையான சிந்தனைகளுடன் ஒரு பெருங்கவலையில் ஆழ்ந்தி ருந்தேன். வெளியே போயிருந்த என் தந்தையார் அப்போது வந்தார். என்னைக் கவனித்து என்ன? வழக்கம்போல் இராமல் ஒரு மாதிரியாக இருக்கிறாயே? என்ன விசேஷம்? என்று கேட்டார். உடனே நான் முதலில் 'ஒன்றுமில்லை' என்று சொல்லிவிட்டு, தாமோதரம் பிள்ளை வந்திருந்ததையும் சிந்தாமணிப் பதிப்பு விஷயமாக நடந்த சம்பாஷணையையும் நான் என்னிடமிருந்த கைப்பிரதியைக் கொடுத்ததையும் மற்ற விவரங்களையும் கூறினேன். அவர், 'அவசரப்பட்டுப் பிரதியைக் கொடுத்திருக்க வேண்டியதில்லை. சிந்தாமணியை நீயே பதிப்பிப்பதாகப் பலரிடம் தெரிவித்திருக் கிறாய். இரவும் பகலும் அதே வேலையாக இருந்து வருகிறாய். நீ தான் பதிப்பிக்க வேண்டும். ஒரு கவலையும் இல்லாமல் ஸ்ரீமீனாட்சி சுந்தரேசுவரர் காப்பாற்றுவார். நாளைக் காலையில் அவரிடம் போய் நான் சொன்னதைச் சொல்லிக் கையெழுத்துப் பிரதியை வாங்கி வந்து மேலே கவனிக்க வேண்டியதைக் கவனி' என்று தைரியமாகச் சொன்னார். 'நானே பதிப்பிப்பது தான் முறையாகும்' என்ற முடிவுக்கு வந்தேன்.

ஆனாலும்

கவலைப்படவேண்டாம்.

ஆகாரம் செய்துவிட்டுப் படுத்தேன்; தூக்கம் வரவில்லை. தாமோதரம் பிள்ளையிடம் என்ன சமாதானம் சொல்லிப் பிரதியைத் திரும்ப வாங்கி வருவது என்று யோசித்தேன். ஒன்றும் தோன்றவில்லை. பொழுது எப்போது விடியுமென்று காத்திருந்தேன். பொழுது விடிந்தவுடன் அனுஷ்டானம் முதலியவற்றை முடித்துக் கொண்டு என் தம்பி சிரஞ்சீவி சுந்தரேசனுடன் தாமோதரம் பிள்ளையின் வீட்டுக்குச் சென்றேன். அவர் வீட்டுத் திண்ணையில் நான் இருந்து, அவர் வருவதை எதிர்பார்த்துக்கொண்டே யிருந்தேன்.நான் வந்ததைக் கேட்டு அவர் வெளியே வந்தார். வந்தவர் என் பிரதியை என் கையில் கொடுத்துச் சில சந்தேகங்கள் கேட்கத் தொடங்கினார். அப்போது யாழ்ப்பாணம் அம்பிகை பாக உபாத்தியாயர் என்பவரும் உடன் இருந்தார். முதற் பாகத்தைப் பார்க்கையில் 20 பக்கங்கள் வரையில் அவர் கோடிட்டு 'ஸ்பேஸ்' அடையாளம் செய்திருப்பது தெரிந்தது. அவர் 'ஞமனேறுயர்த்த' என்னும் செய்யுளின் உரையில்உள்ள 'ஏற்றை' மேம்படுத்தின என்பது என்ன? பவர்துரை அச்சிட்டுள்ள புத்தகத்தில் மேம்படுத்தின் என்று இருக்கிறது. இதை விளங்கச் செய்யவேண்டும் என்று கேட்டார்; விளக்கினேன், 'வென்றிக் களிற்றை விரிதாரவன் வென்ற வாறும்' என்பதற்குப் 'பிறரை முன்பு வென்ற வெற்றியையுடைய களிறு' என்று உரை