உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 21.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வரலாற்று இணைப்பு-3

சி.வை. அழகு சுந்தரனார் (கிங்ஸ்பெரி)

'அழகு சுந்தரம் என்னும் கிங்ஸ்பெரி தொல்காப்பியம், கலித்தொகை முதலிய நூல்களை முதல் முதல் வெளியிட்ட பெருமை வாய்ந்த தாமோதரம் பிள்ளையின் அருமைப் புதல்வர். அவர் இளமையில் கிறிஸ்துவம் தழுவினர். அதற்குக் காரணம், 'நான் ஏன் கிறிஸ்துவன் ஆனேன் என்று அவரால் எழுதப் பெற்ற நூற்கண் குறிக்கப்பட்டுள்ளது. அந்நூலை யான் படித்துப் பார்த்தேன். அழகு சுந்தரத்தால் குறிக்கப்பெற்ற காரணம் பொருந்திய தென்று எனக்குத் தோன்றவில்லை. ரெவரெண்ட் கிங்ஸ்பெரி, மெஸபெட்டோமியா யுத்த களஞ்சென்று

திரும்பியதும், என் அன்புக்குரிய நண்பராயினர். முதல் முதல் அவருடன் யான் பேசிய போது கோயில் கிறிஸ்துவமென்னும் பாதிரிக் கிறிஸ்துவத்தை அவர் விரும்பவில்லை என்பது நன்கு விளங்கிற்று. திருவாசகத்தையும் சுவிசேஷத்தையும் ஒருமைப் படுத்தி அவர் வெளியிட்ட கருத்துக்கள் என் உள்ளத்தைக் கொள்ளை கொண்டன. கிங்ஸ்பெரி, கிறிஸ்து தெய்வத்தினின்றும் இறங்கிய மகன் அல்லன் என்றும் அவர் மனிதராயிருந்தே தெய்வ நிலை யடைந்தவர் என்றும் பேசியும் வந்தார். எழுதியும் வந்தார். அப்பேச்சும் எழுத்தும் பாதிரிக் கிறிஸ்துவருக்கு வெறுப்பூட்டின. கிங்ஸ்பெரி திருச்சபையினின்றும் விலக்கப்பட்டார்.

பாதிரிக் கிறிஸ்துவம் எக்பர்ட் ரத்தினத்தை (பிஷப்நிலையத் தலைமைக் கணக்கர்) வேலையினின்றும் விலகச் செய்தது. கிங்ஸ்பெரியைத் திருச்சபை யினின்றும் நீக்கியது. எட்டாம் எட்வர்ட்டை அரியாசனத்தினின்று அகற்றியதும் ஈண்டு நினைவுக்கு வருகிறது. இச் செயல்கள் உண்மைக் கிறிஸ்துவ மாகுமா? பகைவரையும் நேசிப்பதன்றோ கிறிஸ்துவம்?

திரு.வி.க. வாழ்க்கைக் குறிப்புக்கள் (630-31)

'கிங்ஸ்பெரி' 1941 ஏப்பிரலில் தமிழ்ப்பொழிலில் ஒரு கட்டுரை வரைந்துள்ளார் (17:1). அவர் சிறந்த மொழியியற்