உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 21.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122

இளங்குமரனார் தமிழ் வளம் - 21

சிந்தனையாளர் என்றும் மொழிமரபு போற்றுபவர் என்பதுடன், பிறரும் போற்ற வேண்டும் என்று வலியுறுத்துபவர் என்றும் அக்கட்டுரையால் அறிய வாய்க்கிறது. 'தமிழ்படும் பாடு' என்பது கட்டுரைத் தலைப்பு. 'பிரான்சிசு கிங்ஸ்பரி தேசிகர்' என்பது கட்டுரை யாசிரியர் பெயர்.

செய்திக்குறிப்பு:

'பத்தனாய்ப் பாட மாட்டேன்' - ககரம் வேறுமெய் சாராது. இந்நாள் பண்டிதர் வித்துவான் புலவர் நாவலர் மகோபாத்தி யாயர்கள் 'பக்தனாய் (Bhaktha) என்கின்றனர். பத்தனைச் சூத்திரத் தமிழ் என்கின்றனர்.

பக்தனாய்ப் பாட மாட்டேன் பரமனே பரம யோகீ

எனப் பாடப் பாவம் என் தமிழ் நாப் புரள மாட்டாதே! இப்படிக் கூறுவதால் பிராமணரை மட்டும் குறித்தேன் என்று எண்ண வேண்டா. முப்புரிநூல் இல்லாத சூத்திரப் பார்ப்பாரும் தங்களைச் சத் சூத்திரர் எனச் சொல்லிப் பிராமணப் போலி பேசவும் எழுதவும் வந்து விட்டார். இவர் வடமொழியைக் கனவிலும் காணாதார். அன்னநடை நடக்கத் தன்னடை கெட்டவர் இவர் மகேஷ்வரன் ஆஷ்ரமம் எனப்பேசி வெட்கக்கேட்டைக் காட்டுகின்றனர். பாலராசன் பால்ராஜ் ஆகிவிட்டான்.கோபாலன் கோபால் ஆகிவிட்டான். சங்கரன் ஷங்கர் ஆகிவிட்டான். ஒருவன் என்பதற்குப் பெண்பால் ஒருத்தி என்பது இழிவாம். ஒருவள் என்கிறார். தமையன் என்பதற்குப் பெண்பால் தமையந்தி என்பார் போலும்;

இரண்டு இராசாக்கள், ஆறுவீரர்கள் பிழை என்றார் என் ஆசிரியர்; திணை வழுவமைதி பால் வழுவமைதி என்பர் புத்திலக்கணக்காரர்; இலக்கணமெல்லாம் வழுவாம் போலும்.

அழகு சுந்தரம் பாவலர் என்பதும் நன்கு விளங்குகின்றது. தம் தந்தையார் மறைந்த போது பாடிய இரங்கல் பாக்கள் அவர்தம் உள்ளமும் உருக்கமும் ஊற்றெழச் சுரந்தனவாம்.

தாயில்லான் என்றென்னைத் தரணியோர் செப்பிடினும் நேய உடன்பிறப்பில் நீசனெனப் பேசிடினும் பேயேனுக்குண்டோர் பிதாவென்று நானிருந்தேன் நீயோ எனையிந்த நீணிலத்தில் விட்டகன்றாய்! என்றினிமேல் உன்றன் எழிலார் முகம் காண்பேன்! என்றினிமேல் உன்றன் இனிய குரல் கேட்பேன்;