உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 21.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் வளர்த்த தாமோதரனார்

என்றினிமேல் நீதான் எழுதுநிரு பம்பெறுவேன்; என்றினிமேல் இவ்வுலகில் ‘எந்தாய்' எனவிளிப்பேன்! ஆனந்தங் கொண்டேன் அரதனம் பெற்றாள் மணியென் றானந்தத் தோடே அனுப்பினநின் கைக்கடிதம் போன வருடமிந் நாள் புந்திகுளி ரப்பெற்றோம், போன விடத்திருந்து போடாயோ ஒர் கடிதம்? 'மன்னுங் கமலமென வைப்பாய் ஒருபெயரே உன்னுடைய பிள்ளைக்'கென் றோர்கடிதம் வரைந்தாய்; மன்னுங் கமலமவள் வாய்திறந்து ‘தாதா'வென் றுன்னையழைக் கின்றாள், ஒளித்தெங்கே சென்றாய் நீ?

பிள்ளைகடாந் தேடப் பெரியார் ஒளித்தாடல்

உள்ளதுநம் நாட்டில் ஒருவரில்லை யீதறியார்; பிள்ளைமுடி யாது பெரிதாய் வருக வெனிற்,

பிள்ளைக்கு முன்னிற்றல் பெற்றியன்றோ நீபகராய்?

123

ஒன்பான் பாடல்களுள் இவையைந்து. கொச்சகக் கலிப்பா என்பது யாப்புக் குறிப்பு; இறுதியது மட்டும் வெண்பா.

66

'அழகு சுந்தரம் (பிரான்சிஸ் கிங்ஸ்பெரி) 1873 - 1941. இவர் சி.வை. தாமோதரம் பிள்ளையின் புதல்வர். பி.ஏ. பட்டதாரி, சென்னை அரசாங்கத்தார் தொகுத்த பேரகராதியின் தொகுப்புக் குழுவில் துணையாசிரயராகவும், கொழும்புப் பல்கலைக் கழகத்தில் தமிழ் ஆராய்ச்சியாளராகவும் இருந்தவர். இவர் இயற்றிய நூல்கள் ஏசு வரலாறு, அகப்பொருட் குறள், இராமன் கதை. பாண்டவர் கதை, சந்திரகாசம் என்பன. Life of Jesus, Jesus of nazareth முதலிய நூல்களையும் எழுதியுள்ளார்”

-

தமிழ்ப் புலவர் அகராதி.ந.சி.க.