உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 21.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134

66

இளங்குமரனார் தமிழ் வளம் - 21

க்காலத்துப் புலவர் பெருமானென யாவரும் கொண்டாடும் திரிசிரபுரம் மீனாக்ஷிசுந்தரம்பிள்ளை யவர்கள், இராமநாதபுரம் வித்துவான் பொன்னுசாமித் தேவரவர்கள், நவீன பவணந்தி எனச் சிறப்புப் பெயர் விளங்கிய ஐயம்பிள்ளை உபாத்தியாயரவர்கள், திருமயிலை வித்துவான் சண்முகம் பிள்ளை யவர்கள் என்று இன்னோரெல்லாம் தம்பெயர் வல்லொற்று மிகாமல் எழுதுபவராயின் யான் தாமோதரம் பிள்ளை என்று எழுதுதலும் விலக்காகுமன்றிக் குற்றமாகாதே விதி, விலக்கு இரண்டும் உணர்ந்தாரன்றோ குற்றங் காட்டற்கு உரியர் ஆவர்? அப்பசுவாமிகளையும் அப்பச் சுவாமிகள் ஆக்குவர் என்றஞ்சுகின்றேன். யான் சாதித்த மௌனத்தை என் இஷ்டர்கள் மன்னிக்க" என்கிறார்.

அறைகூவல்:

குறை கூறுவார்க்கு ஓர் அறைகூவல் விடுக்கிறார் தாமோதரர் : "இந்நூற்பதிப்பில் (கலித்தொகை) யாவர்க்காயினும் குற்றங்கூற இஷ்ட மளதாயின், அன்னோர் இன்னும் அச்சில் தோற்றாத நற்றிணை பரிபாடல் அகம் புறம் என்று இவற்றின் ஒன்றைத் தாமாகப் பரிசோதித்து அச்சிடுவித்து அதன்மேற் குறைகூறும்படி வேண்டிக்கொள்கின்றேன். யான் வித்தியா அகங்காரத் தினாலாவது திரவிய ஈட்டத்தினாலாவது இதில் ஏற்பட்டவன் அல்லன் என்பதை இன்னும் ஒருகால் வற்புறுத்துகின்றேன்” என்கிறார்.

வடமொழிப் பயிற்சி:

வீரசோழியப் பதிப்புரையில் "வடநூற் பயிற்சி யில்லாத எனக்கு" என்று எழுதி, அந்நூல் விதிகளை உதவியவர்களுக்கு நன்றியுரைத்திருந்தார் தாமோதரர், மறுத்துக் கூறுவதே நோக்காக உடையவர் தனை விட்டு வைப்பரா? அதனால் "வடநூற் பயிற்சியில்லாத அவர் போன்றவர் இவ்வித ஆராய்ச்சியில் ஒரு முடிவு காண அருகர் அல்லர்" என மறுத்தனர். அவர்க்குத் தம் கேள்வியறிவுச் சிறப்பை வலியுறுத்தி எழுதிய தாமோதரர்,

"வடநூற் பயிற்சியில்லாத எனக்கு” என்று யான் வீரசோழியப் பதிப்புரையில் எழுதியது அப்பாஷையறிவு சிறிதும் இன்மையான் அன்று. சமஸ்கிருதத்தில் சந்தியும் கிரியையும் பாடம் பண்ணி, அமரமும் நானார்த்த ரத்தினா வலியும் ஓதி, இதோபதேசமும் இரகுவமிசமும் பார்த்துளேன்; ஆயினும் சின்னூல் கற்றுப் பன்னூற் புலவர் போலத் தம்மை மதிப்பார் போலாது, என்

7