உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 21.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் வளர்த்த தாமோதரனார்

133

சுமையைத் தலை மேலேற்றிக் கொள்ளாது இன்னும் பல காலந் தமிழ் படித்தற்கு உரிமை பூண்டு நிற்கும் என்போலியரே இதில் கையிடுவது பேரவசிய மாயிற்று."

இவை தொல்காப்பியப் பொருளதிகாரப் பதிப்புரையில் தாமோதரர் வரைவன. நூல் அச்சிடும் புலமையர் எண்ணம் அந்நாளில் இருந்த வகையைக் கலித் தொகைப் பதிப்புரையில் சுட்டுகிறார்: "இக்காலத்துப் புத்தகங்களைத் தேடிப் பரி சோதித்து அச்சியற்றும் வித்துவசனர்களோ தமக்குப் பொருள் வரவையே கருதி விரைவில் விலைபோகும் விநோத நூல் களையும் பள்ளிக்கூடங்களுக்கு உபயோகமான பாடப்

புத்தகங்களையும் சர்வகலா சாலையாரால் பற்பல பரீக்ஷைகளுக்கு ஏற்படுத்தப்பட்ட போதனா பாகங்களையுமே அச்சிடுகின்றனர். சரஸ்வதியின் திருநடனம் சொலிக்கப் பெற்றனவாகிய சங்க மரீஇய நூல்கள் சிதைந்தழியவும் அவைகளில் அவர்களுக்குச் சற்றேனும் திருட்டி சென்றிலது.

'இதனைக் கண்டு சகிக்கலாற்றாது மனநொந்து அழிந்து போகும் சுவடிகளை இயன்றமட்டும் தேடி, அவற்றுள் தமிழிற்குப் பேரிலக்கணமாகிய தொல்காப்பியம் சொல்லதிகாரம் சேனாவரையம், அதன் பொருளதிகாரம் நச்சினார்க்கினியம், வீரசோழியம், இறையனார் அகப்பொருள், திருத்தணிகைப் புராணம் என்று இன்னவற்றைப் பலதேசப் பிரதிகள் கொண்டு பரிசோதித்து அச்சிடுவித்தேன்" என்கிறார்.

சபாபதி நாவலர் நடாத்திய, 'ஞானாமிர்த' இதழாசிரியர் ஒருவர் அவர் தம் பெயரைத் தாமோதரம் பிள்ளை என்று கையெழுத்திட்டு, அவ்விதழின் தமிழ் நடைக்குத் தாமே பொறுப் பென்று விளம்பியவர்; பின்னர்க் கலியாண சுந்தரம்எனப் பெயர் சூட்டிக் கொண்டவர். அவர், தாமோதரம் பிள்ளை எனப்பெயர் எழுதுதல் தவறென்றும் 'தாமோதரப் பிள்ளை' என்றிருத்தல் வேண்டுமென்றும் வினாக் கிளப்பினார். அதற்கு மறுமொழி எழுதுகிறார் தாமோதரர்:

பெயர்ப் பிழை:

"யான் தாமோதரம் பிள்ளை என என் பெயர் எழுதுதல் தவறு என்றும், அது தாமோதரப் பிள்ளை என்றிருத்தல் வேண்டும் என்றும் கிளம்புகின்றார். அப்படிப்பட்டவரோடு யாது வாதம் புரிவது? தம் பெயர் எழுதுவதற்கே இன்னும் கற்றுக் கொண்டிருக் கின்றார் போலும். இவரை எதிர்த்தல் "வென்றாலும் தோற்றாலும் வசையன்றோ?"