உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 21.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132

இளங்குமரனார் தமிழ் வளம் - 21

ஈடுபட்டாரும் ஒதுங்கி நிற்றலையும், அன்னாரும் குறைகூறித் திரிவதையும் பதிப்புரைகளில் விரிவாக விளக்கியுள்ளார் தாமோதரர்:

சம்பளத்திற்காக ஏடெழுதுவோரது சாதாரண கல்வித் திறமையையும், எழுத எழுத வழுக்கள் அதிகப்படும் விதத்தையும், பழைய காலத்து ஏட்டுப் பிரதிகள் அடைந்திருக்கும் ஈனஸ்திதி யையும், பாடங்கேட்டோர் இல்லாத தன்மையையும் நோக்கில், அநேக வித்துவான்களாய் ஒருசபை சேர்ந்து ஒருவரோடு ஒருவர் தீர்க்க ஆலாசனை செய்து பதிப்பினும் பல வழுக்கள் புகுதற்கு டனாய இவ்வரிய நூலை (தொல். பொருள்), யான் ஒருவனாய்ப் பரிசோதித்துப் பிரசுரஞ் செய்தமையால் இடமிடந்தோறும் பலபல வழுக்கள் செறிந்திருத்தல் இன்றியமையாமையாம்."

"ஐயந்திரிபறத் தாம் கற்றறியாததோர் நூலை இவர் இங்ஙனம் வழுவுற அச்சிட வேண்டிய தென்னை என யாரும் வினவுவராயின், வழுச் செறிந்தது ஆயினும், அடியோடழிந்து போகிற் நூலை அடியேன் பாதுகாத்தது பேருபகாரமன்றோ என்க. மேலும் இதனை உரை உதாரணங்களோடு பாடம் கேட்டவர் யாராவது உளராயின் அன்றோ அவரையன்றி யான் செய்தது தவறாவது? யார் செய்யினும் இதுவே முடிவாயின் அடியேன்மேற் குறை கூறுதல் தர்மம் அன்று

66

'அன்றியும் சும்மா கிடந்த அம்மையாருக்கு அரைப் பணத்துத் தாலி போதாதா? காண்டற்கும் அரிய நூலைக் கைக் கெட்டப் பண்ணினது கேடாமா" பிரதி கிடைப்பதே மிக அருமையாயும் கிடைப்பினும் குறைப்பிரதிகளாகவும் அவை தாமும் ஒரோ ஒரு வரிக்குப் பல வழுவாக ஆயிரக் கணக்கான வழு உடையனவாகவும் இருக்க அடியேன் அவ்வழுத் தொகையைக் குறைத்து நூற்றுக் கணக்காக்கி விட்டதா என்மேற் குறையாயிற்று?

"அங்ஙனமாயின் இவரினும் வல்லோராய் இன்னும் அநேக வழுக்கள் குறையப் பிரசுரஞ் செய்யத் தக்க வித்துவான்கள் லரோ எனின், உளராயின் ஏன் செய்திலர் என விடுக்க."

"பலபெரும் வித்துவான்கள் இந்நூலை அச்சிட விரும்பியதும் முயன்றதும் இரண்டொரு பிரதிகள் தேடிப் பார்வையிட்டதும் தமக்கு நிகழ்ந்த சந்தேகங்களான இதனை அச்சிடில் தம் பெயர்க்குக் குறைவு நேரிடுஎன்று தம் முயற்சியைக் கைவிட்டதும் அடி யேன் பூரணமாக அறிவேன். ஆதலாற் பண்டிதர் கவிராஜ பண்டிதர் மகாவித்துவான் புலவர் என்றின்னை பெரும் பட்டச்