உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 21.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் வளர்த்த தாமோதரனார்

131

நீரிற்கு 'உறை' யென்பது போல இறை என்றும் வலிமைக்குத் 'தா' என்பது போலத் 'தூ' என்றும், முற்கால வழக்கு இருந்திருக் கலாமே! எத்தனை சொற்கள் தற்கால வழக்கில் எடுத்தாளாத பொருளில் பண்டையோராற் பிரயோகிக்கப் பட்டிருக்கின்றன. இலக்கிய இலக்கண ஆதாரமாக ஒன்றினைத் தவறென்று ஒருதலையாக நிச்சயித்துழியன்றி ஏட்டுப்பிரதிகள் யாவும் ஒத்திருந்தனவற்றை யான் மாற்றகில்லேன். அடியேன் சிற்றறிவுக்கு ஏற்ற மட்டும் பரிசோதனை செய்து அச்சிட்டு அடியோடு அழிந்து போகும் பழைய நூல்களை நிலை நிறுத்துவான் புகுந்தேன். ஆதலின் நூலைத் திருத்துவதும் பொருள் இசையச் செய்வதும் என் கடமை அன்று. இயன்ற அளவும் பூர்வரூபம் பெறச் செய்வதும் இயலாத இடத்து இருந்தபடி உலகிற்கு ஒப்பிப்பது மேயான் தலையிட்ட தொழிலென்பதை இன்னும் ஒருகால் உலகத்தார் முன் விண்ணப்பஞ் செய்து கொள்கின்றேன். பிழையாயினவற்றைத் திருத்திப் படித்தல் ஆன்றோர் கடன். கண்ணுக்கும் அகப்படாமல் கிடந்த ஏட்டுப் பிரதிகளைக் கடிதத்தில் பல பிரதிரூபஞ் செய்து கைக் கெட்டப் பண்ணுகின்றேன் என்றே கொள்ளுக" என்கிறார்.

தாம் பதிப்புத்துறையில் புகுதற்குரிய கட்டாயம் ஏற்பட்ட தையும் அதனால் பிழையுண்டாயின் பொறுத்தற் கடனையும் சுட்டுகிறார்.

,

"தொல்காப்பியப் பதிப்புரையில் யான் விவரித்துக் கூறிய பல ஏதுக்களால் இவ்வித முயற்சியில் சிந்தை சென்றில தாதலின் அன்றோ, சகிக்கலாற்றாத பரிதாப சிந்தையோடு பதினாலாம் நாளைப் போரில் துரியோதனன் தன் சேனாபதியிடம் சென்று முறையிட்டு, 'இனி அர்ச்சுனனோடு சண்டையிட யானாவது போகின்றேன்' என்று போனதை ஒப்ப, யான் இத்தொழிலில் பிரவேசித்தது. ஆதலால், என்னைக் கடந்து சிற்சில வழுக்கள் இலைமறை காய்போல் அங்கும் இங்கும் கிடப்பின் அதையிட்டு என்மேற் குற்றம் ஏற்றல் மறைமுகத்தால் தர்மமாகாது போவதின் நில்லாது, நேர் முகத்தால் பேர் அநியாயம் என்றுணர்க என்கிறார். இக் குறிப்பால், இவர்தம் பதிப்பிலுள்ள குற்றங் குறைகளை மெய்யாகவும் புனைவாகவும், இவர் வருந்துமாறு பலர் உரைத்தும் எழுதியும் வந்தனர் என்பது விளங்கும்.

பதிப்பில் ஈடுபட்டமை :

99

ஏடுகளின் நிலைமையையும் அதுகண்ட தம் வேட்கையையும், தமிழ் அறிஞராயவர் இத்துறையில் ஈடுபடாமையையும்,