உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 21.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130

பதிப்புநிலை:

இளங்குமரனார் தமிழ் வளம் - 21

சில மேற்கோள் நூற்பாக்கள் ஏட்டுப்படிகளில் ஒழிக்கப் பட்டமையும், அவற்றுக்குச் சான்று வட மொழியில் காணாமையும், பொருள் புரிந்து கொள்வதற்கு இயலாமையும் இருந்தும், அவற்றைப் பதிப்பில் சேர்த்தலால் பயனில்லை எனப் பலர் கூறியும், தாம் விடாது பதிப்பித்த பதிப்புச் செம்மையையும் பகர்கிறார். தாமோதரர் மேலும்,

இறந்து போகவிடாது நிலைநிறுத்துவதேயன்றி உலகத்திற்கு வீரசோழியத்தை உணர்த்துவது நமது நோக்கமன்று. ஆதலானும், இவ்வாறு பொருள் விள்ளாதிருந்தன சில பின்னர் வீசகணித ஆதாரமாகக் கணக்கேற்றிய போது புலப்பட்டமையாலும் கூட்டுதலும் மாற்றுதலும் போலக் குறைத்தலும் ஒருவர் நூலைப் பதிப்பிப் போர்க்குப் பெருங் குற்றமாதலானும் அவற்றை இருந்த வண்ணம் ஒப்பித்தனம் என்கிறார்.

பதிப்பு நோக்கம் :

தாம் வீர சோழியத்தைப் பதிப்பிப்பதன் நோக்கம் இன்ன தெனவும் திட்டமாகத் தெரிவிக்கிறார் தாமோதரர் :

“நல்ல வித்துவான்களுள்ளும் அநேகர் தாம் வீரசோழியம் என்னும் பெயரைக் கேட்டதன்றி நூலைப் பார்த்தறியேம் எனப் பலப்பல சமயங்களில் நமக்கு நேரே சொல்லினர். ஆதலால், அழிந்திறந்து போன நூல்களுள் தானும் ஒன்றாகி இன்னும் சிலகாலத்தில் மருந்துக்கும் அகப்படாமல் போய்விடும் என்றஞ்சி அதன் பாலிய யவ்வன சொரூபம் கிட்டாது ஆயினும் கிடைத்த வரைக்கும் அதனைக் காப்பாற்றுதலே இதனை இப்போது அச்சிடுவித்த நோக்கம் என்றுணர்க" என்கிறார்.

கலித்தொகைப் பதிப்புரையில் மேலும் அழுத்தமாகப் பதிப்புச் செம்மையைக் குறிப்பிடுகிறார். நெய்தற்கலி 29 ஆம் செய்யுள் 7 ஆம் அடியில் உண்கணிறை மல்க எனவும் 16 ஆம் அடியில் தூவற எனவும் பாடமாக, உரையில் அவற்றிற்கு முறையே 'உண்கண் நீர் நிறைகையினாலே' எனவும் 'வலியறும்படி' எனவும் பொருள் கூறியிருப்பது பிற்காலத்து ஏடெழுதுவோரால் நேரிட்ட தவறென்றும்,நீர் என்றதற்கும் வலி என்றதற்கும் இயையுமாறு பாடத்தை 'உறை' என்றும் 'தா' என்றும் மாற்றிவிடுதல் தகுதி என்றும் சில தக்கோர் சொல்லியும் யான் அதற்கு உடம்பட்டிலேன்.