உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 21.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் வளர்த்த தாமோதரனார்

விடியல வெங்கதிர் காயும வெயமல கலறை'

55

129

என்னும் தொடரையும் ஓர் பரிபாடற் செய்யுளையும் சரியாய்ப் பிரித்துணர்வதற்கு எத்தனையோ புலவர்களிடம் கொண்டு திரிந்ததையும், எத்தனையோ புலவர்களுக்குக் கடிதம் எழுதிக் கேட்டதையும், அவருக்கு அவர்களிடமிருந்து வந்த மறுமொழிகளை வெளியிட்டுச் சொன்னால் வெட்கக் கேடாதலையும், அவற்றால் ஆறுமுக நாவலர் பெருமையைத் தாம் உணர்ந்தமையையும் விளக்குகிறார்.

சரகத்தைச் 'சாகம்' என்றும், அளபை'அன்'பென்றும் இதர விதரத்தை இதா விதா என்றும், திகந்தராளத்தை திகந்தாரள மென்றும், மென்மையை மேன்மை என்றும் தபுதார நிலையைத் தபுதரா நிலை யென்றும், மூதலவன் என்பதை முதல்வன் என்றும் இன்னம் பலவாறாக மயங்கினோர். பெயர் பெற்ற வித்துவான்களே யாதலின், ஏட்டுப் பிரதியோடு ஊடாடிய சிரேஷ்ட புலவர்கள் அடியேன் தவறுகளைப் பாராட்டாது பொறுத் தருளுவதுமன்றி இன்னம் இம்முயற்சியை வியந்து கொள்வார்கள் என்பதில் ஐயமில்லை," என்கிறார்.

பாடம்:

இருந்த வண்ணம் பதிப்பித்ததை அன்றித் திருத்திப் பதிப்பித்தது இல்லை எனினும், இதுவே உண்மைப்பாட மெனக் கொள்ளவேண்டுவதில்லை என்ற குறிப்பையும் வைக்கிறார் தாமோதரர் :

"தற்காலத்தில் தமிழ் நாடுகளில் வழங்கும் பிரதிகள் அனைத்திலும் இப்பொழுது யாம் அச்சிட்டு வெளிப்படுத்தும் ரூபம் மேலானதென்று கொள்வதே யன்றி, ஏட்டுப் பிரதியின் ஆதாரமில்லாது யாம் ஒரு மொழியும் மாற்றிலேமாயினும், இது தான் ஆசிரியர் எழுதிய சுத்தரூபமென்று கொள்ளற்க. அனைத்து மாறுபாடுந் திருத்தி ஆதிரூபங் காட்டுதல் இனி எத்துணை வல்லார்க்கும் அரிது.

பிறநூற்றுணிவிற்கு மாறுபட்டும் தற்கால வழக்கத்தை விரோதித்தும் சரியான அர்த்தம் புலப்படாமலும் சமுசயம் நிகழ்ந்த இடத்தும் எல்லாத் தேசத்துப் பிரதியும் ஒத்திருந் தனவற்றையும் யாம் சிறிதும் திருத்திப் பதிப்பித்திலேம். அவற்றைத் தம் மதத்தின்படி திருத்துதல் அறிவுடையோர்க்கு இயல்பன்று," என்கிறார்.