உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 21.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128

இளங்குமரனார் தமிழ் வளம் - 21

கும்பகோணம் வித்தியாசாலைத் தமிழ்ப் பண்டிதர் ஸ்ரீமத் வே. சாமிநாதையரைக் கேட்டால் இந் நால்வகை யாசிரியர் பாட்டின் தார தம்மியம் சற்றே தெரியலாம். எனக்கு அவரும் அவருக்கு நானுமே சாட்சி” என்பது அது.

சுவடியின் அருமை :

சுவடி கிட்டும் அருமையையும் அதனைப் படிக்கும் அல்லலையும் மேலும் சுட்டுகிறார் தாமோதரர்

ஒரு நூலைப் பரிசோதித்து அச்சிடுவதற்கு முதலில் கையெழுத்துப்பிரதிகள் சம்பாதிப்பதே மஹாபிரயாசை. அதிலும் ஒரு நூல் பழையதும் இலேசில் விளங்காதது மானால் எழுதுவாரும் ஓதுவாரும் இல்லாமல் இருக்கிற இடமும் தெரியாமல் போய்விடுகின்றது. கலித்தொகைப் பிரதிகள் தேடயான்பட்ட கட்டம் வாயினால் கூறும் அளவைத் தன்று. முதன்முதல் யான் பார்த்தது புதுவை நயனப்ப முதலியாரது மூலபாடப் பிரதி. அது தலையும் கடையும் குன்றிய குறைப்பிரதி. மேலும் பெரும்பாலும் எழுத்துக்கள் சிதைந்து ஒரு பாட்டின் ஓருறுப்பாவது முற்றும் வாசிக்க முடியாமற் கிடந்ததாற் படிப்பதற்கே வெறுப்பு உண்டாய் நீக்கிவிட்டேன்" என்கிறார்.

ஒருவரிடத்துள்ள சுவடியைப் பெற்றுத் தருமாறு வேண்டியபோது அவர், "அரவின் சுடிகை அரதனத்திற்கும் ஆழிவாய் இப்பியுண் முத்திற்கும் அவை உயிரோடு இருக்குங் காறும் ஆசை கொளல் வேண்டாவாறுபோல இம்மஹானுடைய சீவதசையில் இவர் கைப்பட்ட புஸ்தகங்களைக் கண்ணாற் பார்க்கும் அவாவினை ஒழிக" என்று பதிலெழுதினர். சிவனே! சிவனே! இதுவும் கலித்தொகையைப் பிடித்த கலித்தொகையோ என்று உளநொந்தேன்" என்பதால் ஏட்டுப்படி கிட்டற் அருமையைச் சுட்டுகிறார் தாமோதரர்.

ஏடு படித்தல் :

காம்

ஏட்டெழுத்தைப் பொருளொடு படித்தற் குரிய டரை அவர் பலவாறு குறிப்பிடுகிறார்:

'பொருட் டொகுதி' என்பது பொருட்டொகுதி,

போருட்டொகுதி, பேரர் உட்டொகுதி, பேர் அருட்டொகுதி, பேரருட்டோகுதி, போருட்டேர்குதி, பொருட்டேர்குதி, என்றற்றொடக்கத்தனவாய்ப் பல பாடவேறுபாட்டுடன் படிக்க டமாக இருத்தலையும் குறிக்கிறார்.