உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 21.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் வளர்த்த தாமோதரனார்

127

"மூன்று விரலைக் காட்டிக் கட்டிலிற் கால்போலப் பஞ்ச பாண்டவரையும் ஆறு கோணத்திலும் நிறுத்துக என்பான் தொகை விபரீதத்தோடு விரலை வா லென்றும், கட்டிலைக் கடால் என்றும் பஞ்சபாண்டவரைப் 'பிஞ்குப் பாகற்காய்' என்றும் மாற்றி எழுதி வைத்தால் அம்மொழியைச் சரிப்படுத்தல் இலேசாகுமா?" என்பது அவர் எழுப்பும் வினா, சுவடிகள் பழமையானவை என்றால் பிழைகள் குறைவாயிருக்கும். ஆனால் ச்சியரித்த துளைகள் மிக்கிருக்கும் என்பதைச் சுட்டும் தாமோதரர்,"பிரதி எத்துணைப் பழையதோ அத்துணை அதன் மாறுபாடுகள் குறைவு. ஆனால் பூர்வ பிரதிகள் பாண வாய்ப்பட்டு எழுத்தொன்றற்குப் பாணவரி மூன்று என்றால் யாது தான் செய்யத்தக்கது!" என்கிறார்.

ஏட்டின் நிலை:

64

'ஏடு எடுக்கும் போது ஓரம் சொரிகிறது; கட்டு அவிழ்க்கும் போது இதழ் முரிகிறது; ஒன்றைப் புரட்டும் போது துண்டு துண்டாய்ப் பறக்கிறது; இனி எழுத்துக்களோ வென்றால் வாலும் தலையும் இன்றி நாலு புறமும் பாணக் கலப்பை மறுத்து மறுத்து உழுது கிடக்கின்றது" என்று ஏட்டின் நிலைமை அவர் குறிக்கும் தன்மை நவிற்சி, நம் மென்மனத்தைப் படாப்பாடு படுத்துதல் மெய்ம்மை".

பதிப்பாசிரியர் பாடு:

சுவடிகளில் இருந்து படித்துப் படியெடுத்துப் பதிப்பிக்கும் பதிப்பாசிரியர்பாடு எத்தகைய பெருமையது என்றும் குறிக்கிறார்:

(4

லக்கணக் கொத்துடையார், நூலாசிரியர், உரை யாசிரியர், போதகாசிரியரென வகுத்த மூவகை ஆசிரியரோடு யான் பரிசோதனா ஆசிரியரென இன்னு மொன்று கூட்டி, இவர் தொழில், முன் மூவர் தொழிலினும் பார்க்க மிகக் கடியதென்றும் அவர் அறிவு முழுவதும் இவர்க்கு வேண்டிய தென்றும் வற்புறுத்திச் சொல்கின்றேன். தூக்கினால் அன்றோ தெரியும் தலைச்சுமை?

"பரிசோதனாசிரியர் படும் கஷ்டமும் ஓர் அரிய பழைய நூலைச் சுத்தமனசாட்சியோடு பரிசோதித்து அச்சிட்டார்க் கன்றி விளங்காது. இவையெல்லாம் அநுபவத்தால் அன்றி அறியப்படாப் பொருள்கள். ஒன்றற் கொன்று ஒவ்வாத இருபது இருபத்து ஐந்து பிரதிகளையும் அடுக்கி வைத்துக்கொண்டு என் கண்காணச் சிந்தாமணி பரிசோதனை செய்து பதிப்பித்த